12 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - மொழி - இலக்கணத் தேர்ச்சிகொள் - பாடப்பகுதி வினா & விடை ( புத்தகம் - பக்கம் எண் - 17 )

 

12 ஆம் வகுப்பு - தமிழ்

இயல் - 1  , மொழி

இலக்கணத் தேர்ச்சிகொள் 

( பாடப்பகுதி வினா & விடை )

( புத்தகம் - பக்கம் எண் : 17 )



****************    ************    ***********

இலக்கணத் தேர்ச்சிகொள்

1. பிழையான தொடரைக் கண்டறிக.

அ. காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.

ஆ. மலை மீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்

இ. காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.

ஈ. நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

பிழையான தொடர்

இ. காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.

2. பேச்சுத் தமிழில் அமைந்த தொடரைத் தேர்க.

அ. அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.

ஆ. புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

இ. வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.

ஈ. மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.

பேச்சுத்தமிழில் அமைந்த தொடர்

அ. அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.

3 ) முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம். இவ்விரு சொற்கள் உணர்த்தும் பொருளை அறிந்து தொடர் அமைக்கவும்.

1. முடிந்தால் தரலாம் - நம் நண்பர் பணம் கேட்டால் நாம் முடிந்தால் தரலாம்.

2. முடித்தால் தரலாம் - வேலையாளுக்குரிய ஊழியத்தை வேலையை முடித்தால் தரலாம்.

4.தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?

பிழையின்றி எழுதுவதற்கான முயற்சிகள்.

1. பிழையின்றி எழுதக் குறில் நெடில் வேறுபாடுகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

2. எழுத்துகளின் ஒலிப்புமுறை, அவற்றுக்கான வரிவடிவம், அவை சொல்லில் வரும் இடங்கள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

3. மயங்கொலிப் பிழைகளைத் தவிர்த்தால் சொல் முரண்பாடும், பொருள் முரண்பாடும் வராது.

4. நகர, னகர, ணகர வேறுபாட்டை அறிந்துகொள்ள வேண்டும். ரகர றகர வேறுபாடு லகர ளகர ழகர வேறுபாடு இவற்றையும் அறிந்து கொள்ளவேண்டும்.

5. ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பைப் பயன்படுத்தும் முறையையும், துணைக்கால் வரும் இடங்களையும் அறிந்தால் குறில் நெடில் வேறுபாடு தெரியும், பிழைகள் தவிர்க்கலாம்.

6. வல்லினம் மிகும் இடம், மிகா இடம் இவற்றையும்தெரிந்துகொள்ளவேண்டும்இதனால் சந்திப்பிழையைத் தவிர்க்கலாம்.

7. வல்லின 'ற்' என்னும் எழுத்திற்கு அருகில் எந்தப்புள்ளி எழுத்தும் வராது
என்பதைத் தெளிவாக அறிய வேண்டும்.

8.. வரியின் தொடக்கத்தில் புள்ளி எழுத்துக் கண்டிப்பாக வராது.

              இவை எழுத்துப் பிழைகளையும், சொற்பிழைகளையும் தவிர்க்கும் வழி முறைகளாம்.

***************     **************    *********


இனிக்கும் இலக்கணம் -  ' தமிழாய் எழுவோம் ' என்ற தலைப்பில் அமைந்த பாடப்பகுதி எளிய விளக்கத்துடன்.பார்த்து மகிழுங்கள்.



***************     **************    **********


வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  ************* ********

Post a Comment

1 Comments