தவத்திரு.குன்றக்குடி அடிகளார் ( தெய்வசிகாமணி அருணாசல தேசிகர் ) பிறந்த நாள் - 11 - 07 -2021 சிறப்புப் பதிவு

 

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

(தெய்வசிகாமணி அருணாசல தேசிகர் 

பிறந்தநாள் : ஜூலை 11 - சிறப்புப் பதிவு ) 

**************      *************   ***********

அவர்தாம் அடிகளார்

நடுத்திட்டில் பிறந்த நாவுக்கு அரசர்அவர் பழுத்த தமிழ்ப்புலமை பாலித்த பண்பாளர் பல்லக்கை மறுத்துவிட்டு மனிதர்க்கு மதிப்பளித்து 

பலவூர்கள் நடந்து சென்ற புலமைக் குருமணி துறவுக்கே பெருமை சேர்த்த தூண்டா மணிவிளக்கு

பட்டிதொட்டி யெங்கேயும் பட்டுமன்றப் பாங்கினை  

இலக்கிய ஆய்வாக இயக்குவித்த வித்தகர்

பேச்சுக்கலை சமுதாய ஆக்கமெனப்  போற்றியவர்

தெய்வசிகாமணி குன்றக்குடியின் தவமுனி


சைவம் போற்றியவர் சமத்துவ வழிகாட்டி

சாமானிய மக்களுக்கும் திருக்குறளைப் பரப்பியவர்

குன்றக்குடி  என்றாலே குருமணிதான் நினைவுவரும்

என்றென்றும் தமிழ்வாழ  எல்லோர்க்கும் வழி சொன்னார்

கருமைத் திரமேனி கருணைத் திவுருவம்

இருமைக் காவி உடை ஈடில்லாத் தலைப்பாகை


கடல்தாண்டி ரஷ்யாவில் கால்பதித்த காரல் மார்க்ஸ்
காவி உடைக்குள்ளே பொதுவுடைமைச் சித்தாந்தம்
திருக்குறளும் திருமுறையும் வேதமெனப் போற்றியவர்
அப்பர் சுவாமிகளே அவர்தமக்கு வழிகாட்டி
சாதிகளைக் குப்பையைனச் சாடிவந்த வள்ளல் இவர்
பேதமிலாப் பெருவாழ்வே மானுடமாய் மதித்திட்டார் .

அறிவியலும் ஆன்மிகமும் இணைப்பதுவே
அறிவென்பார்
ஆண்டவனே உழைப்புத்தான் ஆதரிப்பீர்
உழவெரென்பார்
கலையாத கன்விதான் காலமெலாம்
நிலைத்திருக்கும்
சிலையாக நிற்காதே சிந்தனையைத் தீட்டிவிடு
படுத்தறிந்து ஏற்றுக் கொள் பாரெல்லாம் உமதாகும்
வகுத்துக்கொள்  வாழ்வதனை வந்தனை செய் தமிழுக்கே !


பாரதியின் வேதாந்தம் பைந்தமிழின் சித்தாந்தம்
ஆதரவாய்க் கொண்டாலே அனைத்தும் சரியாகும்,
மானுடத்தைப் போற்றிடுவீர் மதம்பிடித்து அலையாதீர் !

சமாதான வாழ்வே சமயத்தின் அடையாளம்
மண்டைக் காட்டுச்  சம்பவத்தில் அமைதிகண்ட வெண்புறா !

என்றென்றும் குன்றக்குடி அடிகளார் நீவீர்தாம்
மறைந்தாலும் வாழ்கின்ற குருமணியே !
போற்றி !  போற்றி !

பெரும்புலவர் . மு சன்னாசி.


அடிகளார் பற்றி நாம் கேட்டறியாத பல புதுமையான செய்திகளை நமது பெரும்புலவர் அவர்களின் குரலில் கேட்டு மகிழ்வோம். திரு.மு.சன்னாசி ஐயா அவர்கள் அடிகளாருடன் பயணித்தவர். அடிகளார் தலைமையில் பல பட்டிமன்றங்கள் பேசியவர்.



************   **************     ************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    *******

Post a Comment

0 Comments