வகுப்பு - 9 , தமிழ் - இயல் - 1
கற்கண்டு - தொடர் இலக்கணம்
பயன்பாட்டுத் தொடர்கள் - விரிவான விளக்கம்
( புத்தகம் பக்கம் எண் - 20 )
************* ************** *************
வணக்கம் நண்பர்களே ! நாம் இயல் 1 ல் தொடர் இலக்கணம் குறித்து விரிவாகப் படித்து வருகின்றோம். இன்றைய வகுப்பில் பயன்பாட்டுத் தொடர்கள் பற்றிப் படிப்போம்.
பயன்பாட்டுத் தொடர்கள் பற்றி நமது பெரும்புலவர் ஐயா.திரு.மு.சன்னாசி அவர்களின் காட்சிப்பதிவு விளக்கத்தைக் காண்போமா ?
பயன்பாட்டுத் தொடர்கள்
அப்துல் நேற்று வந்தான் - தன்வினைத் தொடர்
அப்துல் நேற்று வருவித்தான் - பிறவினைத் தொடர்
கவிதா உரை படித்தாள் - செய்வினைத்தொடர்
உரை கவிதாவால் படிக்கப்பட்டது - செயப்பாட்டு வினைத்தொடர்
குமரன் மழையில் நனைந்தான் - உடன்பாட்டு வினைத்தொடர்
குமரன் மழையில் நனையவில்லை - எதிர்மறைவினைத் தொடர்
என் அண்ணன் நாளை வருவான் - செய்தித்தொடர்
எவ்வளவு உயரமான மரம்! - உணர்ச்சித் தொடர்
உள்ளே பேசிக்கொண்டிருப்பவர் யார்? - வினாத்தொடர்
பூக்களைப் பறிக்காதீர் - கட்டளைத் தொடர்
இது நாற்காலி - பெயர்ப்பயனிலைத் தொடர்
அவன் மாணவன் - பெயர்ப் பயனிலைத்தொடர்
************ **************** ***********
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** *********
0 Comments