எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - கவிதைப்பேழை - தமிழ்மொழி மரபு - பாடப்பகுதி வினாக்களும் விடைகளும் / 8 TAMIL - EYAL 2 - BOOKBACK QUESTION & ANSWER

 


              வகுப்பு  - 8  , தமிழ்

        இயல்  - 1 , கவிதைப்பேழை

தமிழ்மொழி மரபு - தொல்காப்பியர் 

பாடப்பகுதி வினாக்களும் விடைகளும்



**************    *************    *********

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பறவைகள் ------பறந்து செல்கின்றன.

அ நிலத்தில் 

ஆ) விசும்பில் 

இ ) மரத்தில் 

ஈ) நீரில் 

விடை : ஆ) விசும்பில்

2. இயற்கையைப் போற்றுதல் தமிழர் --------

அ ) மரபு 

ஆ) பொழுது 

இ) வரவு 

ஈ) தகவு 

விடை : அ) மரபு

3. இருதிணை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ )  இரண்டு +திணை

ஆ) இரு+திணை

இ) இருவர்+திணை 

ஈ) இருந்து +திணை 

விடை :  அ) இரண்டு +திணை

4. ஐம்பால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ ) ஐம்+பால்

ஆ) ஐந்து +பால்

இ) ஐம்பது+பால்

ஈ ) ஐ+பால்

விடை : ஆ) ஐந்து +பால்

II. குறுவினா

1 உலகம் எவற்றால் ஆனது?

விடை:

   இவ்வுலகம் நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்தும் கலந்த கலவையாகும்.

2. செய்யுளில் மரபுகளை ஏன் மாற்றக்கூடாது?

விடை 

         செய்யுளில் மரபுகளை மாற்றினால் பொருள் மாறிவிடும் . அதனால் செய்யுளில் மரபுகளை மாற்றக்கூடாது.


III. சிந்தனை வினா 

1. நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

விடை :

* உலகத்துப் பொருள்களை இரு திணைகளாகவும், ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ்மொழியின் மரபு.

* திணை, பால் வேறுபாடு அறிந்து, இவ்வுலகப் பொருள்களை நம் முன்னோர் கூறிய சொற்களால் கூறுதல் வேண்டும். இம்மரபான சொற்களையே செய்யுளிலும் பயன்படுத்துதல் வேண்டும்.

* தமிழ் மொழிச்சொற்களை வழங்குவதில் இம்மரபுமாறினால் பொருள் மாறிவிடும்.

* எனவேநம்முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றினார்கள்.

*************    **************   ***********

தமிழ்மொழி மரபு பாடலின் விளக்கத்தைக் கீழே உள்ள காட்சிப் பதிவில் காணலாம்.



*****************     ************    ***********

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ***********

Post a Comment

0 Comments