எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - கவிதைப்பேழை - தமிழ்மொழி வாழ்த்து - மதிப்பீடு - பாடப்பகுதி வினா & விடைகள் / 8 TAMIL - EYAL 1 - MATHIPPEEDU - BOOKBACK QUESTION & ANSWERS

 

               வகுப்பு - 8 , தமிழ் 

     இயல் - 1 - கவிதைப்பேழை 

   தமிழ்மொழி வாழ்த்து - பாரதியார் 



************      *************    ***********

மதிப்பீடு 

பாடப்பகுதி வினாக்களும் விடைகளும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்

அ) வைப்பு 

ஆ) கடல் 

இ) பரவை 

ஈ) ஆழி 

விடை : அ வைப்பு

2. 'என்றென்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) என்+ றென்றும் 

ஆ) என்று + என்றும்

இ) என்றும் + என்றும் 

ஈ) என் + என்றும்

விடை : ஆ) என்று + என்றும்

3. 'வானமளந்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) வான +மளந்தது 

ஆ) வான் + அளந்தது

இ) வானம் + அளந்தது 

ஈ) வான் +மளந்தது 

விடை : இ) வானம் + அளந்தது

4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) அறிந்தது அனைத்தும் 

ஆ) அறிந்தனைத்தும்

இ) அறிந்ததனைத்தும்

 ஈ) அறிந்துனைத்தும் 

விடை : இ) அறிந்ததனைத்தும்

5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) வானம் அறிந்து 

ஆ) வான் அறிந்த

இ) வானமறிந்த

ஈ) வான்மறிந்த

விடை : இ) வானமறிந்த

தமிழ்மொழி வாழ்த்து- இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.

விடை : 

வாழ்க வானமளந்தது 

வாழிய வண்மொழி 

II. குறுவினா.

1. தமிழ் எங்குப்புகழ் கொண்டு வாழ்கிறது?

விடை:

     ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்டு வாழ்கிறது.

2. தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது ?

விடை :

       வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருள்களையும் அறிந்து மேன்மேலும் வளர்கிறது.

III.சிறுவினா

1. தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.

விடை : |

         தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க! ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்மொழி வாழ்க!

         ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச்செய்து, புகழ் கொண்ட தமிழ் மொழி வாழ்க!,

        எங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ளவரையிலும் வாழ்க! எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கட்டும்!அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுவதும் சிறப்படைக!

           பொருந்தாத பழைய கருத்துக்களால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித்தமிழ்நாடு ஒளிர்க!

தமிழ்மொழிவாழ்க !தமிழ்மொழி வாழ்க ! என்றென்றும் தமிழ்மொழி வாழ்க!

வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப்பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழி வாழ்க!

 சிந்தனை வினா

1. பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?

விடை :

* தமிழ் மொழி சொல்வளம் நிறைந்தது.

* எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் மொழி

* பழமைவாய்ந்த மொழி,

* தமிழ்மொழி தனித்து இயங்கும்.

* அதனால் பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைத்தார்.

**************     ***********   ************

பாடலும் , பாடலுக்கான காட்சிப் பதிவு விளக்கமும்.




************   ****************    ************


வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ***********

Post a Comment

0 Comments