வணக்கம் செல்லக் குழந்தைகளே ! இன்று ( 18 - 06 - 2021 ) வெள்ளிக் கிழமை நாம் ஓவியம் வரையலாம் வாங்க ! பகுதியின் ஒன்பதாவதாக விலங்குகளில் மிக உயரமான விலங்காக இருக்கக் கூடிய ஒட்டகச் சிவிங்கியைத்தான் இன்று நாம் வரையப்போகின்றோம் .
ஒட்டகச் சிவிங்கி அப்படின்னாலே நமக்கு என்னவெல்லாம் நினைவுக்கு வரும் சொல்லுங்க.
மிகவும் உயரமான விலங்கு
இதன் கழுத்து நீளமாக இருக்கும்.
இதற்கு குரல்நாண் இருந்தாலும் , அதனால் சத்தம் போட்டு கத்த முடியாது.
சிங்கத்தையே காலால் தாக்கிக் கொல்லும் வலிமை இதற்கு உண்டு.
இது இலை , தழைகளைத் தின்னும்.
இதுதான் ஒட்டகச் சிவிங்கி பற்றிய சில தகவல்கள் குட்டீஸ். உங்களோட மூன்றாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில இதப் பாக்கலாம்.
சரி. இப்ப நாம ஒட்டகச் சிவிங்கி எப்படி வரைவதுனு நம்ம ஓவிய ஆசிரியை சொல்லிக் கொடுப்பதைக் கவனித்து அதைப்போல நாமும் வரைவோமா ?
படம் : 1படம் : 2
படம் : 3
படம் : 4
இதோ , ஒய்யார ஒட்டகச்சிவிங்கி ஓவியத்திலிருந்து உயிர் பெற்று . உணவை உண்ணத் தொடங்கி விட்டது.
வண்ணம் : திருமதி.இலஷ்மி பிரதிபா ,
ஓவிய ஆசிரியை , மதுரை.
எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
********************* *********************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்ற நாட்களில் தினமும் கம்பராமாயணம்
உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
0 Comments