ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - பயிற்சித்தாள் - 8 - மதிப்பீடு / 9 TAMIL WORKSHEET 8 - QUESTION & ANSWER

 

 

         ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

                 பயிற்சித்தாள் - 8

                             இயல் 2






மதிப்பீடு

1. பெரியபுராணப்பாடல் பொருளின் அடிப்படையில் பொருத்துக

அ) வானவில்   -  தோன்றி மறையும்

ஆ) அன்னங்கள் - நீந்தி விளையாடும்

இ) எருமைகள்  -  வீழ்ந்து மூழ்கும்

ஈ) வாளைமீன்கள் - துள்ளி எழும்


உரைப்பகுதியைப் படித்து 2முதல் 5 வரையிலான வினாக்களுக்கு
விடையளிக்க.

நாம் பெரும்பாலும் அரிசி உணவை அடிப்படை உணவாகக் கொள்கிறோம். தற்போது கோதுமையும் பயன்படுத்தப் படுகிறது. அடுத்தபடியாகக் காய்கறிகள், பழங்கள், கீரைகள், சிறுதானியங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல்நலம்
சிறக்கும். அவற்றால் எல்லாவகையான சத்துகளும் கிடைக்கும். அதற்கு அடுத்து
குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள் பால், முட்டை, தயிர்,
இறைச்சி போன்றவை. இவை உடல்நலனுக்குத் தேவை. ஆனால், அளவைக் குறைத்துப் பயன்படுத்துவது நல்லது. இறுதியாக மிகக் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுவகைகள் இனிப்புகள், காரவகைகள், எண்ணெயில் பொரித்தவை, செயற்கை பானங்கள் போன்றவை. முறையான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால், மருத்துவரிடம் செல்லவேண்டிய அவசியம் நேராது.சரிவிகித
உணவை உண்டால் நலமோடு வாழலாம்.

2. மருத்துவரிடம் செல்வதைத் தவிர்க்க என்ன செய்யவேண்டும்?

              முறையான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால், மருத்துவரிடம் செல்லவேண்டிய அவசியம் நேராது.

3. உடல்நலம் சிறக்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் யாவை?

                காய்கறிகள், பழங்கள், கீரைகள், சிறுதானியங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல்நலம் சிறக்கும். 


4. மிகக்குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள் யாவை?

பால், முட்டை, தயிர், இறைச்சி போன்ற உணவுகளை மிகக் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

5. மையக்கருத்துணர்ந்து பத்திக்குத் தலைப்பு தருக.

    உணவும் உடல்நலமும்.

6. நிலத்தடிநீர் உயர உங்களுக்குத் தெரிந்த வழிமுறைகள் இரண்டு எழுதுக.

அ ) மழை நீர் சேமிப்பை முறையாகக் கடைபிடிக்கவேண்டும்.

ஆ ) மரங்களை வளர்க்கவேண்டும். புதிய குளங்களை வெட்டுதல் வேண்டும்.

7. பின்வரும் பாடலடியில் நிலம் குழிந்த இடங்கள்தோறும் எவற்றைப் பெருகச்செய்தல் வேண்டும் எனப் புறநானூறு குறிப்பிடுகிறது?

"நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருக"

    நிலம் குழிந்த இடங்கள்தோறும் நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும்.

8. கல்லணையைப்போல நீங்கள் கண்டு / கேட்டு வியந்த பழங்காலத் தொழில்நுட்பக் கட்டுமானங்கள் இரண்டனை எழுதுக.

கங்கை கொண்ட சோழபுரம் - நாழிக்கிணறு

குஜராத்தில் உள்ள இராணியின் கிணறு.

9. ) ஆறு, ஏரி,குளம் போன்றவற்றை ஆண்டுதோறும் தூர்வாராவிடில் ஏற்படும்
விளைவுகளை எழுதுக.

(குறிப்பு:குளம், கிணறு, ஏரி ஆகிய நீர்நிலைகளின் அடிப்பகுதியில் சேர்ந்துள்ள கல்,மண், சகதி போன்றவற்றை இழுத்து வெளியேற்றும் செயலே தூர்வாருதல்
எனப்படும்.)

விடையைக் குறிப்பேட்டில் எழுதுக.

      கல் , மண் , சகதி சேர்ந்து குளம் , கிணறு , ஏரி போன்றவை ஆழம் குறைந்து மேடாகும்.
     
நீர் சேமிப்பின் அளவு குறையும்.


10. உங்கள் பள்ளியில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்த மாணவர் பேரணி  நடைபெறவிருக்கிறது. பேரணிக்குத் தேவையான பதாகைகளில் இடம்பெறும்  முழக்கத்தொடர்கள் ஐந்தனை எழுதுக.

சேமிப்போம் ! சேமிப்போம் !
மழை நீரைச் சேமிப்போம் !

மாரியல்லது காரியமில்லை !
மழை நீரைச் சேமிக்காமல் எதிர்காலமில்லை 

மழை நீரைச் சேகரிப்போம் !
நிலத்தடி நீரை உயர்த்துவோம் !

வீடுதோறும் மழை நீரைச் சேகரித்தால்
நாடுதோறும் வளம் பெருகும் !

மழை நீர் உயிர் நீர் !


11. உரையாடலை நீட்டித்து எழுதுக.

காற்று : என்ன தோழி நலம்தானா?

மேகம்:ம்ம்ம்........

காற்று: ஏன் இந்தச் சலிப்பு தோழியே?

மேகம்:பின்னே என்ன தோழி? ஊரில் மழை இல்லை என்றால் மக்கள்
என்னையே குற்றம் சொல்கின்றனர்.

மேகம்: மழை பெய்யாததற்கு நானா 
               காரணம் ?

காற்று:  மரங்களை மனிதர்கள் வெட்டிவிட்டு நல்லகாற்று இல்லை  , நல்ல மழை இல்லை என்று புலம்புகிறார்கள்.

மேகம்:  மரங்களை வளர்த்தாலே நான் குளிர்வேன் , மழை தருவேன்.

காற்று: ஆமாம் ! நானும் இனிமையான காற்றைத் தருவேன்.

விடையைக் குறிப்பேட்டில் எழுதுக.

12. பின்வரும் குறிப்புகளைக்கொண்டு அரைப்பக்க அளவில் கதையை விரித்தெழுதுக.

மாமரம் - கனிகள் - பலவகைப் பறவைகள்- அழகிய கிளி - மழை இன்மை - மரம்
பட்டுப் போதல் - பறவைகள் வேறிடம் செல்லல் - கிளி மரத்தில் தங்கியிருத்தல் -
உணவின்மை - முனிவர் வருகை - கிளியின் செயலை வியத்தல் - வரம் தருதல்
- மரம் தழைத்தல் - புத்துயிர் பெறல் - பறவைகள் வருகை - நன்றி பாராட்டல்.

விடையைக் குறிப்பேட்டில் எழுதவும்.

            ஒரு காட்டில் ஒரு பெரிய மாமரம் இருந்தது. கனிகள் நிறைந்த அம்மரத்தைப் பலவகைப் பறவைகள் நாடி வரும். அதில் ஓர் அழகிய கிளி ஒன்றும் உண்டு.சில நாட்களில் அம்மரம் பட்டுப்போனது.பறவைகள் எல்லாம் பறந்தோடி விட்டன.அழகிய அக்கிளி மட்டும் அங்கேயே இருந்தது. 

அவ்வழியே வந்த முனிவர் பட்டுப்போன மரத்தில் இருந்த கிளியிடம் நீ மட்டும் ஏன் இங்கே இருக்கிறாய் ? எனக்கேட்டார். அதற்கு அந்த அழகிய கிளி நான் இங்கே பலநாட்கள் தங்கி இருந்துள்ளேன் இம்மரம் பசுமையாக இருந்த போது. இன்று இம்மரம் பட்டுப்போனாலும் அதை விட்டு எனக்குப் பிரிய மனமில்லை . நானும் இம்மரத்துடனே உணவின்றி உயிர் துறப்பேன் என்றது. கிளியின் செயலை வியந்த முனிவர் , கிளியிடம் உனக்கு ஒரு வரம் தருகிறேன் கேள் ' என்றார்.

            கிளி மகிழ்ந்து , பழைய நிலைக்கு இந்த மரத்தை நீங்கள் மாற்ற வேண்டும் என வேண்டியது. முனிவரும் வரம் தந்தார். மரம் தழைத்தது. கிளியும் புத்துயிர் பெற்றது. மீண்டும் பறவைகள் மாமரத்தைத்தேடி வந்தன. அனைத்துப் பறவைகளும் கிளிக்கு நன்றி பாராட்டின.


13 ) காட்சியைக் கண்டு கவிதை எழுதுக.




சின்னச் சின்ன மழைத்துளிகள்
சிங்கார மழைத்துளிகள்
வண்ணக்குடை வீசியே
ஆடிடுவேன் மழைநீரில் .

சின்ன வாத்து குதூகலிக்கும்.
செல்லமாக நீந்தி மகிழும்.
பள்ளிப்பை நனைந்தாலும்
பாடி ஆடிடுவேன் மழை நீரில் !


************************   *******************

மேலே உள்ள பயிற்சித்தாள் 8 வினாக்களின் விடைகளை கீழே உள்ள காட்சிப் பதிவில் கண்டு மகிழலாம்.





வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

**********************   ********************

நன்றி - திரு.மணிமீனாட்சி சுந்தரம் , தமிழாசிரியர் , மதுரை.

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
      97861 41410

************************   ******************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்ற நாட்களில் தினமும் கம்பராமாயணம் 

உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*************************     ****************

Post a Comment

0 Comments