ஓவியம் வரையலாம் வாங்க ! - பகுதி - 7 , அழகாய் வரையலாம் ஆப்பிள் ! - குழந்தைகளுக்கான உற்சாகத் தொடர்.

 

ஓவியம் வரையலாம் வாங்க !

பகுதி - 7  - அழகாய் வரையலாம் ஆப்பிள்.

வழங்குபவர் : திருமதி.இலஷ்மி பிரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
      வணக்கம் செல்லக் குழந்தைகளே ! இன்று நாம வரையப்போற ஓவியம் ஆப்பிள். ஆப்பிள் நாம விரும்பிச் சாப்பிடும் பழங்களில் ஒன்று.

பழம் சாப்பிட்டா நீங்க பலம் பெறுவீர்கள். ஆமா குழந்தைகளா ! பாலித்தீன் பையில் அடைத்து விற்கப்படும் திண்பண்டங்களைத் தவிர்த்து , ஆரோக்கியம் தரக்கூடிய  பழங்களை நாம் உண்ண வேண்டும்.

   இன்று நான்  பழக்கடையில் பழம் வாங்கிக் கொண்டிருந்தேன். அப்ப நண்பர் ஒருவர் வந்தார். என்ன சார். பழம் வாங்குற மாதிரி தெரியுதே ன்னார்.

ஆமாங்க ! என்றேன்.அ

 வீட்ல யாருக்கும் உடம்புக்கு முடியலயானு கேட்டார். இல்லையே என்றேன அப்றம் ஏன் பழம் வாங்குறிங்க னு கேட்டார்.

  குழந்தைகளே ! நம்மில் பலர் மனநிலை எப்படினா, உடம்புக்கு முடியலன்னாதான் பழம் சாப்பிடனும் ங்கு குறிக்கோள்ள இருக்காங்க. தினமும் ஒரு பழம் சாப்பிட்டால் நமது உடல் வலுப்பெரும்.


ஆப்பிள் பழம் எப்படி அழகா வரையலாம்னு பாப்போமா ?

படம் : 1
படம் : 2
படம் : 3
 
அழகிய ஆப்பிள் பாருங்கள் !
அனைவரும் வரைந்திட வாருங்கள் !
சிவப்பு வண்ணத்தில் சிரிக்கிறதே !
அழகால் கண்களைப் பறிக்கிறதே !

என்ன குழந்தைகளா ? எவ்ளோ அழகா இருக்கு. அப்படியே சாப்பிடலாம் போல தோணுதா ? படத்தை வரைந்துவிட்டு , அம்மாவிடம் சொல்லி ஒருஆப்பிள் சாப்பிடுங்கள். 

நாளை மற்றுமோர் அழகிய ஓவியத்தில் சந்திப்போம்.


வண்ணம் : திருமதி.இலஷ்மி பிரதிபா ,                                     ஓவியஆசிரியை , மதுரை.


எண்ணம் : மு.மகேந்திர பாபு ,                                                     தமிழாசிரியர் , மதுரை.

***********************   *******************

Post a Comment

0 Comments