ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - பயிற்சித்தாள் - 7 - பெரிய புராணம் - எழுத்து & காட்சிப்பதிவாக ! / 9 TAMIL WORKSHEET 7 - QUESTION & ANSWER

 

               ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

                          இயல் 2

                    பயிற்சித்தாள் -7

        கவிதைப்பேழை - பெரியபுராணம்







1. கீழ்க்காண் தொடர்கள் உணர்த்தும் கருத்தினைத் தெரிவுசெய்க.

அடுக்கல் சேர்ப்பார் - நெற்கட்டுகளைப் போராகக் குவிப்பர்; குன்று செய்வார்பிடிக்கப்பட்ட மீன்களைக் குன்று போலக் குவிப்பர்; பொருப்பு யாப்பார் - சங்குகளையும்முத்துகளையும்குன்றைப்போலக்குவிப்பர்;வெற்புவைப்பார்-மலர்களைமலைபோலக் குவிப்பர்.

அ) மக்களுடைய எண்ணங்கள்

ஆ)மக்களின் பொழுதுபோக்கு

இ) நாட்டின் வளம்

ஈ) மன்னனின் செயல்கள்

விடை- இ) நாட்டின் வளம்


2. அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் எது?

"சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக்

காலிரும் பகடு போக்கும் கரும்பெரும் பாண்டில் ஈட்டம்"

அ) முகில் கூட்டங்கள்

ஆ)பொருள் நிறைந்த பைகள்

இ) எருமைக் கூட்டங்கள்

ஈ) நெல்கற்றைகள்

விடை - ஈ) நெல்கற்றைகள்

2 ) பின்வரும் பெரியபுராணப் பாடலைப் படித்து 3முதல் 5வரையிலான வினாக்களுக்கு விடையளிக்க.

"நாளிகே ரஞ்செருந்திநறுமலர் நரந்தம் எங்கும்

கோளிசா லந்த மாலம் குளிர்மலர்க் குரவம் எங்கும்

தாளிரும் போந்து சந்து தண்மலர் நாகம் எங்கும்

நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்கம் எங்கும்"


3. குளிர்மலர், நிறைமலர் ஆகியவற்றின் இலக்கணக்குறிப்பைக் கண்டறிக.

அ) உம்மைத்தொகை

ஆ) பண்புத்தொகை

இ)அன்மொழித் தொகை

ஈ) வினைத்தொகை

விடை -  ஈ) வினைத்தொகை

4. 'எங்கும்' என்னும் இயைபுச் சொல் மூலம் உணர்த்தும் பொருளைத் தெரிவுசெய்க.

அ) எல்லா இடங்களிலும் நிறைந்த செழுமை

ஆ) தண்மலர்களின் மென்மை

இ) மலர்கொண்ட மரங்களின் வன்மை

ஈ) குரவ, நாக மரங்களின் வகைமை

விடை -  அ) எல்லா இடங்களிலும் நிறைந்த செழுமை


5 ) பாடலிலுள்ள எதுகை, மோனை, இயைபு நயங்களை எடுத்தெழுதுக.

நாளிகே , கோளிசா , தாளிரும் , நீளிலை - ளி - அடி எதுகை

றுமலர் , ரந்தம் - ந சீர்மோனை

குளிர்மலர்க் , குரவம் - கு சீர் மோனை


6. பாடலைப் படித்துக் கல்லும் மலையும் குதித்து வந்தது யார்? என்ற வினாவிற்கு
விடைதருக.

"கல்லும் மலையும் குதித்து வந்தேன்-பெருங்
காடும் செடியும் கடந்து வந்தேன்;
ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல
ஏரி குளங்கள் நிரப்பி வந்தேன்"

-கவிமணி

விடை - கல்லும் மலையும் குதித்து வந்தது ஆறு


7. பின்வரும் பாடல் அடிகளின் பொருளை விரித்தெழுதுக.

"காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை"


சொற்பொருள்

கழை -  கரும்பு, கா - சோலை, குழை - சிறு கிளை, அரும்பு-மலர்,  மொட்டு, 
மாடு - பக்கம், நெருங்கு வளை நெருங்குகின்ற சங்குகள்.

       காவிரி நீரின் பெருக்கத்தால் காடுகளில் கரும்புகள் செழித்து வளர்கின்றன.சோலைகளில் அரும்புகள்
முகிழ்க்கின்றன.வயலில் சங்குகள் கிடக்க , பக்கத்தில் குவளை மலர்கள் மலர்ந்துள்ளன.

8. படத்தைப் பார்த்து உங்களின் கருத்தை நான்கு தொடரில் எழுதுக.




கிழக்கு வானம் சிவக்கின்றது.
கதிரவனின் பொற்கிரணம் பட்டு
அன்னங்கள்
வண்ணம் பெறுகின்றன.
அன்னத்தின் வெண்மை
நாளை பளிச்சிட வைக்கிறது.
சின்னப்பறவை சிறகசைத்து
இக்காலையை வரவேற்கிறது.


9. பாடலடிகளுக்கேற்ற பொருளைப் பொருத்துக.

அ) அரிதரு செந்நெற் சூட்டின்
 அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார் 

அரியப்பட்ட செந்நெற்கட்டுகளை அடுக்கிப் பெரிய போராகக் குவிப்பர்.


ஆ) மண்டுபுனல் பரந்தவயல்
வளர்முதலின் சுருள்விரியக்
 - நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின்
முதலிலை சுருள் விரிந்தது.


இ) காவிரிப்புனல் கால்பரந்
தோங்குமால்  -   நீர்நிலைகள் நிறைந்த நாட்டுக்கு,வளத்தைத் தரும் பொருட்டு காவிரி நீர் கால்வாய்களில் பரந்து எங்கும் ஓடுகிறது.

10. "பூக்கள்" என்ற தலைப்பில் நான்கு வரியில் கவிதை படைக்க.

எ.கா.
"மழை"

"மழை பொழியநிலம் குளிரும்
நிலம் குளிர பயிர் செழிக்கும்
பயிர் செழிக்க மனம் நிறையும்
மனம் நிறைய வாழ்வு மலரும்"

           "பூக்கள்"

பூக்களின் மலர்ச்சியே
பூமியின் மகிழ்ச்சி.
வண்ண வண்ண மலர்களை
எண்ண எண்ணச் சிவப்பு.

***********************   *******************

பயிற்சித்தாள் 7 - பெரிய புராணம் வினாக்களின் விடைகளை காட்சிப் பதிவாகக் கண்டு மகிழலாம்.



***********************  *******************


வாழ்த்துகள் மாணவச் செல்வங்களே !


நன்றி - திரு.மணிமீனாட்சி சுந்தரம் , தமிழாசிரியர் , மதுரை.

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
      97861 41410

************************   ******************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்ற நாட்களில் தினமும் கம்பராமாயணம் 

உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*************************     ***************







Post a Comment

0 Comments