எட்டாம் வகுப்பு - தமிழ் - பயிற்சித்தாள் - 27 - மதிப்பீடு / 8 TAMIL - WORKSHEET 27 - QUESTION & ANSWER

 


எட்டாம் வகுப்பு - தமிழ்   -  இயல்  - 7

பயிற்சித்தாள் - 27  -  மதிப்பீடு

எழுத்து & காட்சிப் பதிவில் வினா & விடைகள்




*******************     *****************


1.கீழ்க்காணும் பாடலடிகளில் பயின்றுவந்துள்ள அடுக்குத்தொடர்களை எடுத்தெழுதுக.

மொத்தமாய்த் தேசத்தை

முற்றுகையிட்ட

மூட மூட

நிர்மூட உறக்கத்தை

ஓடஓட

விரட்டியடித்து.

விடை: மூட  மூட ,  ஓட ஓட

2. பகத்சிங் பார்த்துப் பரவசப்பட்ட அற்புத விடியலைக் கவிஞர் மீராவின் பாடலடிகள் வழி விளக்குக. (பக். 147)

விடை

சதி வழக்கினில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டபகத்சிங், தூக்கிலிடப் படும் கடைசி நேரத்திலும் தன் மனக்கண்ணில் கனவு கண்ட இந்தியாவின் விடியல் தோன்றிய நாள் இன்று.


3. 'உன் பிறந்தநாள்' என்னும் தலைப்பில் கவிதையினைத் தொடர்க.

தாயின் கருவிலிருந்து சேயாய் வந்துபிறந்தது
எந்த நாளோ அந்த நாள் இன்று

மாணவர்களே ! தங்கள் மனதில் என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதை கவிதையாக்குங்கள்.

4. கீழ்க்காணும் தொடர்களைச் சந்திப் பிழைகளின்றி எழுதுக.

அ) கேரளாவை சேர்ந்தவர்களாகிய எம்.ஜி.ஆரின் பெற்றோர், குடும்பத்துடன்
இலங்கைக்கு குடிபெயர்ந்தனர்.

விடை: கேரளாவைச் சேர்ந்தவர்களாகிய எம்.ஜி.ஆரின் பெற்றோர், குடும்பத்துடன் இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர்.

ஆ) கும்பகோணத்தில் உள்ள ஆனையடி பள்ளியில் பயின்றார்.

விடை: கும்பகோணத்தில் உள்ள ஆணையடிப் பள்ளியில் பயின்றார்.

இ) அந்த சிறுவர்களில் தம்பி இப்போதுத் தமிழ்நாட்டின் முதலமைச்சர்.

விடை: அந்தச் சிறுவர்களில்,  தம்பி இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர்.

ஈ ) சென்னை பல்கலை கழகம் எம்.ஜி.ஆரின் பணிகளை பாராட்டி டாக்டர் பட்டம்
வழங்கியது.

விடை : சென்னைப் பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆரின் பணிகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது.

5. விடுபட்ட கட்டங்களில் எம்.ஜி.ஆரின் பிற பண்புகளையும் அவர் வாங்கிய
பட்டங்களையும் எழுதி நிரப்புக.

பொன்மனச் செம்மல்
புரட்சித் தலைவர்
மக்கள் திலகம்
பாரதரத்னா
புரட்சி நடிகர்


6. கற்பனையாக எம்.ஜி.ஆர். அவர்களை நேர்காணல் செய்ய ஐந்து வினாக்களை உருவாக்குக.

விடை:

1. தங்களது குழந்தைப் பருவத்தில் மறக்க இயலாத நிகழ்வு ஒன்று கூறுங்களேன்?

2. தாங்கள் நடித்த முதல் திரைப்படம் எது?

3. சத்துணவுத்திட்டம் கொண்டு வந்ததன் காரணம் என்ன?

4. தமிழ்நாட்டில் தங்களுக்கு மிகவும் பிடித்த ஊர் எது?

5. மாணவர்களுக்குத் தாங்கள் கூறும் அறிவுரை என்ன?

7. 'இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்' எனில், 'கருவிகளை எடு' என்னும் சொற்றொடரில் ஏன் மிகவில்லை?

விடை:

வருமொழியில் வல்லினம் வராமையால், இங்கு மிகவில்லை.

தலையைக்காட்டு

வருமொழி வல்லினம் என்பதால்
மிகுந்தது.

8. விடுபட்ட கட்டங்களை நிரப்புக.


எடுத்துக்காட்டு               காரணம்

அ வெற்றிலைபாக்கு - உம்மைத்தொகையில்                                                வல்லினம் மிகாது.

ஆ ) வட்டப்பாறை  -   மகரமெய்யில் முடியும்                                                சொல்லை அடுத்து
                                    வல்லினம் வந்தால் மிகும்

இ ) சுடுசோறு  -   வினைத்தொகையில்                                                  வல்லினம் மிகாது.
ஈ ) எழுதாப்பாடல் -  ஈறுகெட்ட எதிர்மறைப்                                           பெயரெச்சத்தின்
                                  பின் வல்லின வருமொழிச்                                         சொல் வந்தால் மிகும்.

உ ) எந்தத்திசை? - வினாத்திரிபை அடுத்து                                            வல்லினம் மிகும்.

*******************   *********************

மேற்கண்ட பயிற்சித்தாள் 27 ன் விடையகளை இனிய , எளிய விளக்கத்துடன் காட்சிப் பதிவில் கண்டு மகிழலாம்.





*********************   ********************

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

***********************   *******************



GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்ற நாட்களில் தினமும் கம்பராமாயணம் உரைத்தொடர்.


GREENTAMIL.IN - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*************************     ****************


Post a Comment

0 Comments