எட்டாம் வகுப்பு - தமிழ் - பயிற்சித்தாள் - 22 - இயல் 6 - கற்கண்டு - புணர்ச்சி - எழுத்து & காட்சிப்பதிவாக / 8 TAMIL WORKSHEET QUESTION & ANSWER

 எட்டாம் வகுப்பு  - தமிழ் - இயல் 6

பயிற்சித்தாள் - 22

கற்கண்டு - புணர்ச்சி




*********************    ********************


1.பொருந்தாதத் தொடரைக் கண்டறிந்து எழுதுக.

அ) புதிதாக ஓர் எழுத்து தோன்றுவது தோன்றல் விகாரம்

ஆ) ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது திரிதல் விகாரம்

(இ) ஓர் எழுத்து மறைவது இயல்பு புணர்ச்சி

ஈ) நிலைமொழியும் வருமொழியும் இணைவது புணர்ச்சி

விடை:  இ) ஓர் எழுத்து மறைவது இயல்பு புணர்ச்சி

2. கோடிட்ட இடத்தை நிரப்புக.

தமிழ் + அமுதம் என்னும் சொற்களில் தமிழ் என்பது - நிலைமொழி ஆகும்.


3. பொருத்துக.

                                                             விடை

அ) மண்மேடு   -  இயல்பு புணர்ச்சி

ஆ) பொற்சிலை -  திரிதல் விகாரம்

இ) மனிதஇனம்  - கெடுதல் விகாரம்

ஈ ) கடைத்தெரு - தோன்றல் விகாரம்


4. சரியா? தவறா? என எழுதுக.

அ) உடலோம்பல் என்பது விகாரப் புணர்ச்சி ஆகும்.                (தவறு )

ஆ) பசுநெய் என்பது இயல்புப்புணர்ச்சி ஆகும்.                                       ( சரி )


5. கீழ்க்காணும் உரைப்பகுதியில்வரும் தோன்றல் விகாரச்சொற்களை எடுத்தெழுதுக.

கடைத்தெருவில் இராமு தாத்தா ,  தேன்மொழியிடம்அவரைக்காய்,கத்தரிக்காய்,வாழைப்பழம் ஆகியவற்றை வாங்கித்தந்தார்.

விடை: கடைத்தெரு, அவரைக்காய், கத்தரிக்காய், வாழைப்பழம் , வாங்கித்தந்தார்.

6. பொருத்தமான நிறுத்தக்குறியிடுக.

நாம் தமிழ் மக்கள்நாம் நமது தாய்மொழி வாயிலாகக் கல்வி பெறலே சிறப்பு அதுவே இயற்கைமுறை போதிய ஓய்வும் நேரமும் வாய்ப்பும் இருப்பின் வேற மொழிகளையும் பயிலலாம்..

விடை: நாம் தமிழ் மக்கள், நாம் நமது தாய்மொழி வாயிலாகக்கல்வி பெறலே சிறப்பு. அதுவே இயற்கை முறை. போதிய ஓய்வும், நேரமும், வாய்ப்பும் இருப்பின் வேறு மொழிகளையும்   பயிலலாம்.


7. உரைப்பகுதியைப் படித்து, மூன்று வினாக்களை உருவாக்குக.

ஏட்டுக்கல்வியே கல்வி என்னும் ஒரு கொள்கை எங்கும் நிலவிவருகிறது.
ஏட்டுக்கல்வி மட்டும் கல்வி ஆகாது. இந்நாளில் கல்வியென்பது பொருளற்றுக் கிடக்கிறது. குறிப்பிட்டப் பாடங்களை நெட்டுருச் செய்து, தேர்வில் தேறிப் பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது. நாளடைவில் அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பில்லாமல் போகிறது.

வினா 1:

கல்வி பற்றி எங்கும் நிலவி வரும் கொள்கை யாது?

வினா 2: எது மட்டும் கல்வி ஆகாது ?

வினா 3: ஒரு  தொழிலில் நுழைவதற்குக் கருவியாக இருப்பது எது?


8.குறிப்பை விரித்து அரைப்பக்க அளவில் எழுதுக.

குழந்தைகள் தின விழா - மாவட்டக்கல்வி அதிகாரி தலைமை தாங்குதல் -
தமிழாசிரியர் வரவேற்புரை - மாவட்டக்கல்வி அதிகாரி சிறப்புரை குழந்தைகள் கலைநிகழ்ச்சிகள் - கரகாட்டம் - பரதநாட்டியம் - குழுநடனம் - மாறுவேடப்போட்டி - பரிசுவழங்கல் - தலைமையாசிரியர் நன்றியுரை - நாட்டுப்பண்

(குறிப்பேட்டில் எழுதுக)

      எங்கள் பள்ளியில் , பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினவிழாவாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்டக் கல்வி அதிகாரி தலைமை தாங்கினார். எங்கள் பள்ளியின் தமிழாசிரியர் வரவேற்புரை நிகழ்த்தினார். குழந்தைகள் தினம் எவ்வாறு உருவானது என்பது பற்றி மாவட்டக் கல்வி அதிகாரி சிறப்புரையாற்றினார். விழாவில் குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.கரகாட்டம் , பரதநாட்டியம் , குழுநடனம் , மாறுவேடப் போட்டியில் மாணவர்கள் பங்கேற்று மகிழச் செய்தனர்.சிறப்பு விருந்தினர் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி ஊக்கப் படுத்தினார். எங்கள் பள்ளித் தலைமையாசிரியர் நன்றி கூறினார். நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.


9. 'மாமரம்' - இச்சொல்லைப் பிரித்து எழுதிப் புணர்ச்சியை விளக்குக.

விடை

மா+மரம் = மாமரம் - இயல்புப் புணர்ச்சி
எந்த விதமான மாற்றமும் இன்றிப் புணர்ந்ததால் இது இயல்புப் புணர்ச்சி.

10. கீழ்க்காணும் சொற்களின் புணர்ச்சிகளை எழுதுக.

பற்பசை, கன்றுக்குட்டிகள், பணவரவு, பனையோலை, மண்வாசனை.

விடை:

1. பல் + பசை = பற்பசை - திரிதல் விகாரம்
2.கன்று + குட்டிகள் = கன்றுக்குட்டிகள் - தோன்றல் விகாரம்

3. பணம் + வரவு பணவரவு - கெடுதல் விகாரம்

4. பனை+ ஒலை = பனையோலை
தோன்றல் விகாரம்

5. மண் + வாசனை = மண்வாசனை இயல்புப் புணர்ச்சி

*********************  ********************

நண்பர்களே ! மேல உள்ள வினாக்களின் விடைகளை பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி அவர்களின் எளிய விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் கண்டு மகிழலாம்.




*********************  *********************


வாழ்த்துகள்  நண்பர்களே !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

************************   *******************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்ற நாட்களில் தினமும் கம்பராமாயணம் உரைத்தொடர்.


GREENTAMIL.IN - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

அழைத்து மகிழ - 97861 41410


Post a Comment

0 Comments