ஓவியம் வரையலாம் வாங்க ! - பகுதி - 2 , மாணவப் பிரம்மாக்களை உருவாக்கும் புதிய தொடர்.

  வணக்கம் செல்லக் குட்டிகளே ! நாம பகுதி 1 ல வண்ணத்துப் பூச்சி எப்படி வரைவது என்பது பற்றிப் பார்த்தோம் , நிறைய சுட்டிக் குழந்தைகள் படம் வரைந்து அனுப்பியிருந்திக்க. எல்லாப் படங்களும் அப்படியே சிறகடிச்சுப் பறந்தன. இன்னிக்கு நாம வரையப் போற ஓவியம் என்ன தெரியுமா ? மீன் . சாதா மீன் இல்ல ! இது தங்க மீன். 




மீனுன்னால உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் இல்லயா ? நம்ம ஓவிய ஆசிரியை திருமதி.லஷ்மி பிரதிபா அவங்க ஓவியத்தப் பாக்க பாக்க சந்தோசமா இருக்கா. படத்தப் பாக்க கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கா ? ஓ மீன் அப்படின்னாலே கண்ணுக்குக் குளிர்ச்சிதானே! 


 மீன் பாத்திருக்கிங்களா ? மொதல்ல கம்மாயில பாத்தோம் ! குளத்தில பாத்தோம் ! ஆத்துல பாத்தோம் ! கடல்ல பாத்தோம். இப்ப நம்ம வூட்டுக்குள்ளயே கலர் கலரா மீனு வாங்கி அத நம்ம ப்ரெண்டா வளர்த்து வாரோம் அப்படித்தானே ! அதனாலதான் வண்ணத்துப் பூச்சியப் போல ரொம்ப ஈசியா வரையக் கூடிய மீன் படத்த இன்னிக்கு வரையப் போறோம் ! ஓவியம் வரையலாம் வாங்க ! என்ற இந்தத் தொடரப் பாத்திங்கன்னா . வரைஞ்சிங்கன்னா நீங்களும் பெரிய ஓவியரா வந்திருவிங்க. வாழ்த்துகள். 

   பேப்பர எடுங்க. பென்சில எடுங்க ! பிஞ்சு விரலில் உருவாகட்டும் தங்க மீன்.

படம் - 1



படம்  - 2




படம் - 3



படம் - 4



ஆகா ! இதோ தங்க மீன் !



குட்டிச் செல்லங்களா ! நீங்க வரைஞ்ச படமும் சூப்பரா இருக்கு. வாழ்த்துகள். தினமும் வரைந்து பழகுனா நீங்களும் மிகப்பெரிய ஓவியர்தான் ! வாழ்த்துகள் !

நாளை ஓர் அழகான நாய்க்குட்டிவரைவது  எப்படினு பாப்போம் . சரியா ?


வண்ணம் - ( ஓவியம் ) - திருமதி.லஷ்மி பிரதிபா  , ஓவிய ஆசிரியை ,மதுரை.

எண்ணம் ( எழுத்து ) - மு.மகேந்திர பாபு ,தமிழாசிரியர் , மதுரை. 97861 41410


***********************   ******************

Post a Comment

0 Comments