ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் - 1
கவிதைப்பேழை - தமிழோவியம்
பயிற்சித்தாள் - 2
வினா & விடைகள் - எழுத்து & காட்சிப்பதிவாக !
************************ ******************
1.) கருத்தைப் படித்து ஆசிரியரின் பெயரைத் தெரிவுசெய்க.
'வணக்கம் வள்ளுவ' நூலின் ஆசிரியர் மற்றும் ஹைக்கூ, லிமரைக்கூ, சென்ரியு எனப்புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களை வெளிட்டவர்.
அ) கவிஞர் தமிழ்ஒளி
ஆ)வைரமுத்து
இ) ஈரோடு தமிழன்பன்
ஈ) பாரதிதாசன்
விடை- இ) ஈரோடு தமிழன்பன்
2. பாடலிலுள்ள எதுகை, மோனைச் சொற்களை எழுதுக.
"காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! எந்தக்
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!"
மோனை - கா
காலமும்
காலமும்
எதுகை - ல
காலமும்
காலமும்
3."மானிட மேன்மையைச் சாதித்திடக்-குறள் மட்டுமே போதுமே ஓதி,நட" என்ற பாடலடியில் எதை ஓதி, பின்பற்ற வேண்டுமெனக் கவிஞர் குறிப்பிடுகிறார்?
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை ஓதி , பின்பற்ற வேண்டுமெனக் கவிஞர் குறிப்பிடுகிறார்.
4. பின்வரும் புதுக்கவிதையில் நிலா எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது?
"நள்ளிரவில்
மௌனமான கப்பல் தளத்திற்கு மேலே
கப்பலின் உயர்ந்த கூம்பில் சிக்கியிருக்கிறது நிலா
தூரத்தில் காணும் அது
விளையாடிய குழந்தை மறந்துவிட்ட பலூன் தான்"
கப்பலின் உயர்ந்த கூம்பில் காட்சியளிக்கும் நிலா , குழந்தை மறந்துவிட்ட பலூனுடன் ஒப்பிடப் பட்டுள்ளது.
5. பாடலடிகளிலுள்ள அடிக்கோடிட்ட சொற்களுக்கு இலக்கணக்குறிப்பு தந்து,
அச்சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
"எத்தனை எத்தனை சமயங்கள் - தமிழ்
ஏந்தி வளர்த்தது தாயெனவே"
எத்தனை எத்தனை - அடுக்குத்தொடர்
தமிழ் மொழியில் எத்தனை எத்தனை இலக்கியங்கள் !
ஏந்தி வளர்த்தது - வினையெச்சத் தொடர்
தமிழ் தாயைப்போல ஏந்தி வளர்த்த சமயங்கள் பல உண்டு.
6.ஹைக்கூ கவிதைகள் தரும் பொருளை உரைநடை வடிவில் எழுதுக.
அ) உலகம் முழுமைக்கும்
உணவளிக்கும் வயல்
சோற்றுக்கிண்ணம்!
விடை : உலகின் சோற்றுக் கிண்ணம் வயலாகும். உலகம் முழுமைக்கும் உணவு தரும் சோற்றுக் கிண்ணமாக வயல் ஒப்பிடப்பட்டுள்ளது.
ஆ) உலகம் இயங்க
இதயம் ஆனவன்
விவசாயி!
விடை : உடல் இயங்க இதயம் நன்முறையில் வேலை செய்ய வேண்டும். அதுபோல , உலகம் உணவால் சிறக்க விவசாயி முக்கியம்.
7. பின்வரும் இயைபுச்சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
அ) கேட்டு வரும்
ஆ) பாட்டு வரும்
(எ.கா.) "ஏனிவ் விருட்டெனக் கேட்டு வரும் - நீதி
ஏந்திய தீபமாய்ப் பாட்டு வரும்."
விடை : அம்மா , ஒரு பாடல் பாடுங்களேன் எனக் கேட்டு வரும் மாணவர்களின் மனம் மகிழ , தமிழாசிரிடம் இருந்து உடனே பாட்டு வரும்.
8. கவிதையை நீட்டித்து ஆறுவரிகள் எழுதுக.
'சங்கம் வளர்த்த மொழி
சான்றோர் போற்றும் மொழி
தென்னவன் வளர்த்த மொழி
தேனினும் இனிய மொழி
காப்பியங்கள் கொண்ட மொழி
காவியங்கள் தந்த மொழி
முன்னவர் புகழும் மொழி
முக்காலமும் வாழும் மொழி
9.) பாடலடியைப் படித்துத் தமிழ் இலக்கிய நூல் ஒன்றன் பெயரையும் தமிழ் இலக்கணநூல் ஒன்றன் பெயரையும் எழுதுக.
"அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் - அவை
அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்"
இலக்கிய நூல் - அகநானூறு
இலக்கண நூல் - தொல்காப்பியம்
10. படங்கள் இரண்டுடன் உங்கள் எண்ணங்களை இணைத்துக் கவிதை வடிவில் எழுதுக.
மாட்டு வண்டிக் காலமெல்லாம்
மலையேறிப் போனதென்று
சக்கரம் உருட்டும்
சங்கத் தமிழ்சிறுமிகள்.
******************** **********************
மேலே உள்ள வினாக்களுக்கான விடைகளை இனிய , எளிய விளக்கத்துடன் நேரடிக் காட்சிப்பதிவாகக் கண்டு மகிழுங்கள்.
************************ ******************
பாருங்கள் ! கருத்துகளைக் கூறுங்கள் ! நண்பர்களுக்கும் பகிருங்கள் .
நன்றி - திரு.மணி மீனாட்சி சுந்தரம் , தமிழாசிரியர் , மதுரை.
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 97861 41410
********************** ********************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்ற நாட்களில் தினமும் கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
************************* ************
0 Comments