பாடநூல் வினாக்கள் மற்றும் அதற்கான விடைகளை இங்கே நாம் காணலாம் மாணவ நண்பர்களே !
நுழையும்முன் :
' நாடும் மொழியும் நமதிரு கண்கள் ' என்கிறார் மகாகவி பாரதியார். காலவெள்ளத்தில் கரைந்து போன மொழிகளுக்கிடையில் , நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ் . என்ன வளம் இல்லை என்று எண்ணத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு இலங்குகிறது நம் செந்தமிழ் மொழி. அனைத்து வளமும் உண்டென்று விடை பகர்கிறது தமிழ்ச்சொல் வளம்.
மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்களின் புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இவரது ' சொல்லாய்வுக் கட்டுரைகள் ' நூலில் உள்ள தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரையின் சுருக்கம் பாடமாக இடம் பெற்றுள்ளது. பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் , மொழியாராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதிய பாவாணர் , தமிழ்ச்சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர். செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்.உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்.
அதற்கு முன் , இப்பாடக் கருத்துகளை நீங்கள் முதலில் தெரிந்திருத்தல் வேண்டும். இந்தப் பாடத்தையே படமாக இதோ உங்களுக்கு பைந்தமிழ் ( GREEN TAMIL.IN ) வழங்குகிறது.காட்சிப் பதிவைப் பார்த்த பின் வினாக்களுக்கு விடை காண்போம் !
தன் வாழ்நாள் முழுமையும் தமிழுக்காகவே அர்ப்பணித்தவர் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் ஐயா அவர்கள். மதுரையில் அவர் நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. பாவாணர் ஐயாவின் 118 - வது பிறந்த நாள் விழாவில் அவரது பேத்தியிடம் பாவாணர் பற்றி எடுக்கப்பட்ட நேர்காணல் இது. பாவாணரின் தொண்டுள்ளம் அறிய இதைக்காணலாம்.
பலவுள் தெரிக
1. ‘காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது
அ) இலையும் சருகும்
ஆ) தோகையும் சண்டும்
இ) தாளும் ஓலையும்
ஈ) சருகும் சண்டும்
விடை: ஈ] சருகும் சண்டும்
2. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை
அ) குலை வகை
ஆ) மணி வகை
இ) கொழுந்து வகை
ஈ) இலை வகை
[விடை: ஆ மணி வகை
3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரிலுள்ள
பிழைக்கான காரணத்தை எழுதுக.
சரியான தொடர்கள் :
(i) ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
(ii) ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
பிழையான தொடர் :
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
காரணம் :
பல சீப்பு வாழைப்பழங்கள் சேர்ந்ததுதான் ஒரு தாறு.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள்தான் இருக்கும்.
********************** *********************
4 ) ' புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.'
இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
கண்ணன் வயலில் நெல் நாற்றிற்குத் தண்ணீர் பாய்ச்சினான்.
(ii) தாத்தா நிறைய தென்னம்பிள்ளைகளை வாங்கி வந்தார்.
(ii) கத்தரி நாற்றில் வெட்டுக்கிளிகள் இருந்தன.
(iv) மாங்கன்று மழைக்குப் பிறகு தளிர் விட்டுள்ளது.
(v) வாழைமரத்தினடியில் வாழைக்கன்றுகள் உள்ளன.
********************** ********************
யார் இவர் ?
பாவாணரிடம் மிகுந்த பற்றுதல் உடையவர். தற்போது மதுரையில் வசித்து வருகிறார். தமிழ் முறைப்படி திருமணங்கள் நடத்தி வருபவர். இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றல் பெற்றவர். அவர்தான் முதுமுனைவர். ஐயா இளங்குமரனார். அவர் நடத்திய தமிழ் திருமண நிகழ்வு மற்றும் அவரைப் பற்றிய காட்சிப்பதிவு . பார்த்து மகிழுங்கள்.
தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக
.
தமிழில் உள்ள சொல்வளம் :
' மந்திரம் போல் வேண்டுமடா சொல் இன்பம்' என்பான் எட்டயபுரம் தந்த எழுச்சிக்கவிஞன் பாரதி. தமிழில் உள்ள ஒவ்வொரு சொல்லும் அழகானவை. அர்த்தம் நிறைந்தவை.
(0) சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவேனும், தமிழ் மட்டும் அதில் தலைசிறந்ததாகும்.
(ii) “தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழிலுள்ள ஒரு பொருட் பலசொல் வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத் தெளிவாகத் தோன்றும்.
(iii) தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும்சொற்களும் தமிழில் உள்ளது என்கிறார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்)
(iv) தமிழ்ச் சொல் வளத்தைப் பலதுறைகளிலும் காணலாமேனும், இங்குப் பயிர்வகைச் சொற்கள் மட்டும்
சிறப்பாக எடுத்துக்காட்டப்பெறும்.
அடி வகை :
ஒரு தாவரத்தின் அடிப் பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள்.
தாள்
: நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
தண்டு
: கீரை, வாழை முதலியவற்றின் அடி
கோல்
: நெட்டி, மிளகாய்ச் செடி முதலியவற்றின் அடி
தூறு
: குத்துச் செடி, புதர் முதலிவற்றின் அடி
தட்டு அல்லது தட்டை : கம்பு, சோளம் முதலியவற்றின் அடி
கழி : கரும்பின் அடி
கழை : மூங்கிலின் அடி
அடி : புளி, வேம்பு முதலியவற்றின் அடி,
தமிழ்நாடு எத்துணைப்பொருள் வளமுடையதென்பது, அதன்விளை பொருள்வகைகளை நோக்கினாலே
விளங்கும். பிறநாடுகளிலுள்ள கூலங்களெல்லாம் சிலவாகவும் சில வகைப்பட்டனவாகவுமிருக்க,
தமிழ்நாட்டிலுள்ளவையோ, பலவாகவும் கழிபல வகைப்பட்டனவாகவும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக,
கோதுமையை எடுத்துக்கொள்ளின் அதில் சம்பாக்கோதுமை, குண்டுக்கோதுமை, வாற்கோதுமை முதலிய சிலவகைகளே உண்டு.
அவசியம் பார்க்க வேண்டிய காட்சிப்பதிவு . நம் தமிழ் நாட்டில் உள்ள பாரம்பரிய நெல் வகைகள். ஒவ்வொரு நெல் வகையும் நேரடிக் காட்சிப்பதிவாக.
ஆனால், தமிழ்நாட்டு நெல்லிலோ, செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும்சம்பா, மட்டை, கார் என்றும் பல வகைகள் இருப்பதுடன் அவற்றுள் சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச்சம்பா, குதிரைவாலிச் சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலிய அறுபது உள்வகைகள் உள்ளன.
நாட்டின் தனிப்பெரும் வளத்தினாலேயே, பண்டைத் தமிழ்மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக இருந்திருக்கின்றனர். திருந்திய மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக் காட்டுவது மொழியாதலின், அதுவே ஒரு நாட்டாரின்அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கும் சிறந்த வழியாகும். பொருளைக் கூர்ந்து நோக்கி
நுண்பாகுபாடு சொற்களும் நுண்பொருட் சொற்களும் அமைத்துக் கொள்ள வேண்டும். அறிவியல் வளர்ச்சியினால் ஏற்பட்ட புதிய சொற்களுக்கான கலைச்சொல் வளத்தையும் பெருக்க வேண்டும்.
********************** ********************
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே ! பாருங்கள். படியுங்கள். பகிருங்கள்.பயன் பெயருங்கள். அடுத்த பதிவில் தமிழ்ச்சொல் வளம் பாடப்பகுதியின் கூடுதல் வினாக்களையும் விடைகளையும் காண்போம் !
0 Comments