ஓவியம் வரையலாம் வாங்க !
பகுதி - 10
அழகாக டால்பின் வரைவது எப்படி ?
வழங்குபவர் : திருமதி.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
************************* *****************
வணக்கம் அன்புக் குழந்தைகளே !
இன்று நாம வரையப்போற ஓவியம் டால்பின். எல்லாருக்கும் பிடித்த ஒரு நீர்வாழ் உயிரினம் இல்லயா ? இது நாம வரையற எத்தனாவது ஓவியம் ?
பத்தாவது ஓவியம்.
ஆகா ! சூப்பரா சொன்னிங்க.
சரி. இதுவரை வரைந்த ஓவியங்கள் என்னென்ன கொஞ்சம் நினைவு படுத்திப் பார்ப்போமா குட்டீஸ் ?
முதன் முதல் வரைஞ்சது ?
1 ) வண்ணத்துப்பூச்சி
2 ) தங்கமீன்
3 ) நாய்க்குட்டி
4 ) யானை
5 ) கிளி
6 ) சூரிய காந்தி
7 ) ஆப்பிள்
8 ) சேவல்
9 ) ஒட்டகச்சிவிங்கி
இப்ப நாம பத்தாவதாக வரையப்போற ஓவியம் டால்பின்.
இது ரொம்ப புத்திசாலியான உயிரினம். பாலூட்டி வகையைச் சேர்ந்தது. மனிதர்களுக்கு நெருங்கிய நண்பரா இருக்கும். சர்க்கஸ் மாதிரி இதப் பழக்கி வச்சிருப்பாங்க. எந்தத் தீமையும் செய்யாது. நீங்க பாத்திருக்கிங்களா டிவி & சினிமாவுல?
ஓ ! ஆமா ! ஆமா ! மோட்டு , பட்லு ல இத நானும் பாத்திருக்கேன். கடல் கன்னிகளுக்கு தீங்கு செய்ற மாதிரி அதுல காமிச்சிருப்பாங்க. மோட்டு கடலுக்குள்ளாற போயி அதுககிட்ட இருந்து கடல்கன்னிகள காப்பாத்துவான். அப்ப டால்பின்களுக்கு கிச்சுகிச்சு மூட்டி அத சிரிக்க வைக்கிறமாதிரி அதுல வரும் . ஆமா ! அது சின்னப்பசங்க நீங்க பாத்துச் சிரிக்கனும்ங்கிறதுக்காக !
சரி ... இப்ப டால்பின் எப்படி வரைவதுனு ஒவ்வொரு படிநிலையா படத்துல பாப்போமா ?
படம் : 1
படம்: 2
படம் : 3
எப்படி துள்ளிக் குதிக்குது பாத்திங்களா ?
என்ன குழந்தைகளே ! நீங்க எப்படி வரைஞ்சிருக்கிங்க. அனுப்புங்க . பார்ப்போம். சரி. நாளை மற்றுமோர் ஓவியத்தில் சந்திப்போம். நன்றி .
******************** *********************
வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை. 97861 41410
********************** **********************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்ற நாட்களில் தினமும் கம்பராமாயணம்
உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
0 Comments