வகுப்பு 9 - அலகு 1 - அறிவியல்
பயிற்சித்தாள் எண்- 1 - அளவீட்டியல்
சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. பின்வரும் கூற்றுகளில் எந்த கூற்று வானியல் அலகினைப் பொருத்து சரியானது?
அ புவிமையத்திற்கும் சூரியனின் மையத்திற்கும் இடையேயான சராசரித் தொலைவு
ஆ. புவிமையத்திற்கும் நிலவின் மையத்திற்கும் இடையேயான சராசரித் தொலைவு
இ. புவி மையத்திற்கும் செவ்வாய் கிரகத்தின் மையத்திற்கும் இடையேயான சராசரித் தொலைவு
ஈ புவி மையத்திற்கும் வியாழன் கிரகத்தின் மையத்திற்கும் இடையேயான சராசரித் தொலைவு
விடை அ - புவிமையத்திற்கும் சூரியனின் மையத்திற்கும் இடையேயான சராசரித் தொலைவு
2. ---------- அளவிட இயற்பியல் தராசுப் பயன்படுகிறது.
அ நிறையை மட்டும்
ஆ. எடையை மட்டும்
இ. நிறை மற்றும் எடை ஆகிய இரண்டையும்
ஈ. கன அளவை மட்டும்
விடை அ - நிறையை மட்டும்
II. சரியா? தவறா?
3. எல்லா இடங்களிலும் நிறையும் எடையும் மாறாத அளவைப் பெற்றிருக்கும். தவறு
III. பொருத்துக :
கருவி -- அளவிடப்படும் நிறை துல்லியமாக விடை
பொதுத் தராசு - 5 கி.கி வரை
இயற்பியல் தராசு - 10மி. கி வரை
எண்ணியல் தராசு - 1 மி. கி வரை
எடை மேடை - கி.கி வரை
0 Comments