வகுப்பு 10 தமிழ் - மதிப்பீடு Online தேர்வு - 10th Tamil Online Test

 

 வகுப்பு - 10  - தமிழ் - மதிப்பீடு


வணக்கம் ஆசிரியத் தோழர்களே ! மாணவ நண்பர்களே ! அகவிருள் அகற்றி அறிவொளி பரப்பும் ஆசிரியர்களையும் , அன்புச் செல்வங்களாம் மாணவர்களையும் இணைக்கும் கல்விப்பாலமாக நமது Greentamil.in இணையதளம் இயங்கிவருகிறது. 6 முதல் 12 வகுப்பு வரையிலான அனைத்துப்பாடங்களின் வினா & விடைகளை இங்கே  நீங்கள் பார்த்தும் , படித்தும் , பகிர்ந்தும் மகிழலாம். ஆலோசனைகளையும் பெறலாம். நீங்களும் தரலாம். புலனத்தின் வாயிலாகத் தொடர்பிலும் வரலாம்.


மாணவர்கள் தாங்கள் படித்த பாடப்பகுதிகளை நினைவுபடுத்தும்  விதமாக   ஒவ்வொரு இயல் நிறைவிலும் மாணவர்களின் கற்றல் அடைவுகளைப் பரிசோதிக்கும் வகையில்  Online தேர்வுகள் நடத்தப்பட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மாணவர்களின் படைப்பாற்றல் ஊக்கப்படுத்தப்படும். ஆசிரியர் & மாணவர்களின் தனித்திறன்கள் வீடியோவாக இருப்பின் அதை உலகம் முழுவதிலும் Green Tamil என்ற You Tube மூலமாக வெளிச்சப்படுத்தப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கின்றேன். நன்றி.


மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

97861 41410


I  )  பலவுள் தெரிக.
1 ) மெத்த வணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது 

அ ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

ஆ ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்

இ ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்

ஈ ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்

2 ) எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

அ ) எந் + தமிழ் + நா

ஆ ) எந்த + தமிழ் + நா

இ ) எம் + தமிழ் + நா

ஈ ) எந்தம் + தமிழ் + நா

3 ) உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம் - பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை ?

அ ) உருவகம் , எதுகை

ஆ ) மோனை , எதுகை

இ ) முரண் , இயைபு

ஈ ) உவமை , எதுகை

4 ) சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி என்னும் அடியில் பாக்கம் என்பது 

அ ) புத்தூர்

ஆ ) மூதூர்

இ ) பேரூர்

ஈ ) சிற்றூர்

5 ) காசிக்காண்டம் என்பது - 

அ ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்

ஆ ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

இ ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் 

ஈ ) உற்றாரின் விருந்து


6 ) ' உனதருளே பார்ப்பன் அடியனே ' - யாரிடம் யார் கூறியது ?

அ ) குலசேகராழ்வாரிடம் இறைவன்

ஆ ) இறைவனிடம் குலசேகராழ்வார்

இ ) மருத்துவரிடம் நோயாளி

ஈ ) நோயாளியிடம் மருத்துவர்

7 ) பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது ?

அ ) துலா

ஆ ) சீலா

இ ) குலா

ஈ ) இலா

8 ) அருந்துணை என்பதைப் பிரித்தால் 

அ ) அருமை + துணை

ஆ ) அரு + துணை

இ ) அருமை   + இணை

ஈ ) அரு + இணை 

9 ) மலர்கள் தரையில் நழுவும். எப்போது ?

அ ) அள்ளி முகர்ந்தால்

ஆ ) தளரப்பிணைத்தால்

இ ) இறுக்கி முடிச்சிட்டால்

ஈ ) காம்பு முறிந்தால்

10 ) கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன ?

அ ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்

ஆ ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

இ ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்

ஈ ) அங்கு வறுமை இல்லாததால்.

Post a Comment

0 Comments