ஏழாம் வகுப்பு - அறிவியல் - பயிற்சித்தாள் -1
பருவம் - 1 அலகு - 1 - அளவீட்டியல்.
I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1 ) உலக அளவில் அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள அளவீட்டு முறை எது ?
அ ) System unit of india
ஆ ) Unit system of international
இ ) System of international units
ஈ ) Independent unit of system
விடை - இ ) System of international units
2 ) வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிட இயலாத இயற்பியல் அளவுகள் ----- எனப்படும்.
அ ) அடிப்படை அளவுகள்
ஆ ) வழி அளவுகள்
இ ) அடிப்படை பண்புகள்
ஈ ) அடிப்படை அளவுகள்
விடை - ஈ ) அடிப்படை அளவுகள்
3 ) இராமு ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு நடந்து செல்கிறான். அவனது பள்ளிக்கும் , அவனது வீட்டிற்கும் இடையே உள்ள தூரம் 1850 மீட்டர் ஆகும். அவன் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தூரம் நடந்து செல்கிறான் ?
அ ) 1850 மீ.
ஆ ) 3700 மீ.
இ ) 1850 கி.மீ.
ஈ ) 3700 கி.மீ.
விடை - ஆ ) 3700 மீ.
4 ) இராணி தனது வகுப்புத் தோழியான சீதாவிடம் அவர் முதுகு சுவருக்கு எதிராக இருக்கும்படி நிற்கச் சொன்னாள். சீதாவின் தலைக்கு மேலே சுவரில் இராணி ஒரு அடையாளத்தை வைக்கிறார். பின்னர் இராணி தரையில் இருந்து சுவரிலுள்ள அடையாளத்திற்கான தூரத்தை அளந்தார். இந்த அளவு 150 செ.மீ.காட்டுகிறது . சீதாவின் உயரம் என்ன ?
அ ) 15 மீ.
ஆ ) 150 மீ.
இ ) 1.5 மீ.
ஈ) 105 மீ.
விடை - இ ) 1.5 மீ.
5 ) ராஜூ படத்தில் காட்டியபடி ஒரு வளைகோட்டை வரைகிறார்.அவர் வளைகோட்டின் நீளத்தை அளவிட விரும்புகிறார். ஆகவே அவர் பின்வரும் ---- உபகரணத்தைப் பயன்படுத்துகிறார்.
அ) மூங்கில் குச்சி
ஆ) கவை அல்லது நூல்
இ ) மீட்டர் அளவுகோல்
ஈ ) அங்குள்ள அளவுகோல் நாடா
விடை - ஆ ) கவை அல்லது நூல்
6 ) ஒரு மீட்டர் அளவுகோல் இரண்டு துண்டுகளாக உடைந்துள்ளது. உடைந்த மீட்டர் அளவுகோலின் முதல் துண்டின் அளவு 0 செ.மீ.இல் தொடங்கி 54.5 செ.மீ.இல் முடிகிறது. இரண்டாவது உடைந்த துண்டின் அளவு 54.5 செ.மீ.தொடங்கி 100 செ.மீ.ல் முடிகிறது.உடைந்த இரண்டாவது அளவுகோலின் நீளம் என்ன ?
அ ) 54.5 செ.மீ.
ஆ ) 55.5 செ.மீ.
இ ) 53.6 செ.மீ.
ஈ ) 55.4 செ.மீ.
விடை -,
7 ) கமலா கரும்பலகையின் அளவை அளந்தார்,கரும்பலகையின் நீளம் 11 மீ.மற்றும் உயரம் 8 மீ.கரும்பலகையின் பரப்பள்வு ------- ஆகும் ( திறன் )
அ ) 88 மீ.
ஆ ) 88 மீ2
இ ) 88 மீ.-2
ஈ ) 88 செ.மீ.2
விடை - ஆ ) 88 மீ.2
8 ) கவிதா வட்டமான தோட்டத்தின் பரப்பளவு 154 மீ2 என அளந்தார். வட்டத்தின் விட்டத்தைக் கண்டுபிடி.
அ ) 7 மீ.
ஆ ) 14 மீ.
இ ) 14 செ.மீ.
ஈ ) 7 செ.மீ.
விடை - ஆ ) 14 மீ.
9 ) நிறை , அடர்த்தி மற்றும் கனஅளவிற்கான தொடர்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எது தவறான ஒன்றாகும் ?
அ ) அடர்த்தி = நிறை / கன அளவு
ஆ ) நிறை = அடர்த்தி / கன அளவு
இ ) கன அளவு = நிறை / அடர்த்தி
ஈ ) கன அளவு = நிறை / அடர்த்தி
விடை - இ ) கன அளவு = நிறை / அடர்த்தி
10 ) பின்வரும் வாக்கியங்களில் எது தவறானது ?
அ ) அடிப்படை அளவுகளைப் பெருக்கியோ , வகுத்தோ அல்லது கணித அடிப்படையில் இணைத்தோ பெறக்கூடிய இயற்பியல் அளவுகள் வழி அளவுகள் என்கிறோம்.
ஆ ) பொருள் ஒன்றின் தட்டையான மேற்பரப்பின் அளவே அதன் பரப்பளவு எனப்படும்.
இ ) நாம் ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பளவினை ஒரு வரைபடத்தாளைப் பயன்படுத்திக் காணலாம்.
ஈ ) SI அலகு முறையில் பதினேழு அடிப்படை அளவுகள் உள்ளன.
விடை - ஈ ) SI அலகு முறையில் பதினேழு அடிப்படை அளவுகள் உள்ளன.
வாழ்த்துகள் மாணவர்களே !
மீதமுள்ள வினாக்களுக்கான விடைகளை அடுத்த பதிவில் காண்போம். நன்றி.
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை. 97861 41410
0 Comments