ஆறாம் வகுப்பு - சமூக அறிவியல் - பயிற்சித்தாள் 1 - வரலாறு என்றால் என்ன ? - 6th Social Science Worksheet 1 - பருவம் 1

 ஆறாம் வகுப்பு - சமூக அறிவியல் - பருவம் 1 - பயிற்சித்தாள் 1 - வரலாறு என்றால் என்ன ?

சரியான விடையைத் தேர்ந்தெடு.

1 ) தொடக்க கால மக்களின் தொழில் வேட்டையாடுதல் ஆகும் .

விடை - அ ) சரி

2) தொடக்க கால மனிதர்கள் குகைகளில் வாழ்ந்ததற்கான சான்று ------- ஆகும்.

விடை -அ ) குகை ஓவியங்கள்

3 ) கீழ்க்கண்டவற்றுள் எது நினைவுச் சின்னம் அல்ல ?

விடை - ஈ ) செப்பேடுகள்

4 ) கீழ்க்கண்டவற்றுள் எது வரலாற்றுத் தொடக்க கால மக்களுடன் தொடர்பு இல்லாதது ?

விடை - இ ) வரலாற்றுத் தொடக்ககால மக்களின் நாட்குறிப்பேட்டில் இருந்து நாம் அதிக தகவல்களைப் பெறலாம்.

5 ) கீழ்க்கண்டவற்றுள் எது சரியான இணை அல்ல ?

விடை - ஆ) மதச்சார்பற்ற இலக்கியம் - தேவாரம்


கோடிட்ட இடத்தை நிரப்புக.

இஸ்டோரியா என்பதன் பொருள் ( விசாரிப்பதன் மூலம் கற்றல் ) என்பதாகும்.

சரியா ? தவறா ?

வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின் கால வரிசைப்பதிவு ஆகும்.

விடை - சரி

கூற்று மற்றும் காரணத்தைப் படித்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

கூற்று ( A ) பழைய கற்காலத்தில் மனிதன் நிலைத்து வாழக்கற்றுக் கொண்டான்.

காரணம் ( R ) - விலங்குகளிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள அவன் குழுவாக வாழ ஆரம்பித்தான்.

விடை - ஆ ) காரணம் சரி.


2 ) உனது மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் காணப்படும் கல்வெட்டுகளைப் பற்றி ஒரு சில வரிகளில் எழுதுக.


குறிப்பு - மாணவர்கள் தங்கள் ஊர்களின் அருகில் உள்ள கல்வெட்டுகளைப்பற்றித் தெரிந்ததை எழுதலாம்.


3 ) கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உனது குடும்ப  உறுப்பினர்களின் விவரங்களைச் சேகரி.

குறிப்பு - மாணவர்கள் தங்கள் வீட்டிலுள்ள அப்பா , அம்மா மற்றும் உறவு முறையினரின் பிறந்தாண்டு , குடும்ப நபரின் பெயர் , உறவின் முறை பற்றி அண்டவணைப்படுத்துங்கள்.

4 ) 1 - ) கொடுக்கப்பட்ட பத்தியைப் படித்து கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளி.

    பண்டைக்காலத்தில் , மக்கள் பாறைகளில் ஓவியங்கள் வரைந்தனர். வேட்டைக்குச் செல்ல இயலாதவர்கள் குகைகளிலேயே தங்கினர். வேட்டைக்குச் சென்றவர்கள் அங்கு என்ன நடந்தது என்பதைக் காட்டுவதற்காக ஓவியங்களைத் தீட்டினர்.கற்கருவிகள் , புதை படிமங்கள் மற்றும் பாறை ஓவியங்கள் போன்றவை கடந்த கால வரலாற்றுத் தகவல்களை அறிய உதவும் சான்றுகளாகும்


அ ) எங்கே அவர்கள் ஓவியங்களை வரைந்தனர் ?

விடை - பாறைகளில்

ஆ ) யார் ஓவியங்களை வரைந்தனர் ?

விடை - வேட்டைக்குச் சென்றவர்கள்.

இ ) கடந்த கால வரலாற்றுத்தகவல்களை அறிய உதவும் சான்றுகள் யாவை ?

விடை - கற்கருவிகள் , புதைபடிமங்கள் , பாறை ஓவியங்கள்.

2 ) கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் , தமிழ் நாட்டில் உள்ள பழைய கற்கால மற்றும் புதிய கற்கால இடத்தைக்குறிக்கவும்.

விடை கள் - பிரம்மகிரி

பையம்பள்ளி

அதிராம்பாக்கம்

ஆதிச்சநல்லூர்  - வரைபடத்தில் குறிக்கவும்.

5 ) கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.

1 ) பழைய கற்கால மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு எது ?

விடை - நாய்

2 ) கல்வெட்டுகள் பற்றிய படிப்பு எது ?

விடை - கல்வெட்டியல்

3 ) சென்னைக்கு அருகில் பழைய கற்கால கருவிகள் கிடைக்கப்பெற்ற இடம் எது ?

விடை - அத்திரம் பாக்கம்.

4 ) வரலாறு பற்றி நீவீர் அறிவது என்ன ?

விடை - வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின் வரிசைப்பதிவு ஆகும்.


விடை தயாரிப்பு - திருமதி. இராணி அவர்கள் , பட்டதாரி ஆசிரியை , அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி , இளமனூர் , மதுரை.


மாணவர்களும் , ஆசிரியர்களும் பயன்பெற வாழ்த்துகள்.


மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை. 97861 41410


Post a Comment

0 Comments