எட்டாம் வகுப்பு - சமூக அறிவியல் - பயிற்சித்தாள் 1 - அலகு 1 - ஐரோப்பியர்களின் வருகை / 8th Social Science Worksheet 1 - Question & Answer


                      எட்டாம் வகுப்பு - சமூக அறிவியல்

    பயிற்சித்தாள் 1 - அலகு 1 - ஐரோப்பியர்களின் வருகை


I சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1 ) ஐரோப்பியர்களின் வருகை இந்திய வரலாற்றில் --------- காலத்தைச் சார்ந்தது ?

அ ) பண்டைக்காலம் 

ஆ ) இடைக்காலம்

இ ) நவீன காலம்

ஈ ) சமகாலம்

2 ) இந்தியாவின் நவீன கால வரலாறு -------- ம் நூற்றாண்டுகளில் தொடங்குகிறது.

அ ) கி.பி.14 ஆம் நூற்றாண்டு

ஆ ) கி.பி.18 ஆம் நூற்றாண்டு

இ ) 20 ஆம் நூற்றாண்டு 

ஈ ) கி.பி. 16 ஆம் நூற்றாண்டு


3 ) இந்தியாவின் நிர்வாகப் பதிவோகளின் தொகுப்புகள் பாதுகாக்கப்படும் இடம் ------

அ ) அருங்காட்சியம்

ஆ ) புனித ஜார்ஜ் கோட்டை

இ ) ஆவணக்காப்பகம்

ஈ ) புனித லூயிஸ் கோட்டை

4 ) வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி  வரலாறு ------ அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுகிறது.

அ ) காலம்

ஆ ) புத்தகம்

இ ) ஆதாரங்கள்

ஈ ) வரலாற்றாசிரியர்

5 ) -------- இந்திய வரலாறு எழுதும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தினர்.

அ ) பாரசீகர்கள்

ஆ ) ஆங்கிலேயர்கள்

இ ) கிரேக்கர்கள்

ஈ ) ரோமானியர்கள்

II கீழ்க்காணும் குறிப்புகளைப் பயன்படுத்தி கோடிட்ட இடத்தை நிரப்புக.

6 ) ( பயன்பாட்டு ஆதாரம் , ஆவணக்காப்பகம் , டெல்லி , எழுதப்பட்ட ஆதாரம் , சென்னை )

1 ) அரசாங்க பதிவுகள் மற்றும் ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடம் ------

    ஆவணக்காப்பகம்   

2 ) இந்தியாவின் செல்வத்தைப் பற்றி ஐரோப்பியர்கள் அறிவதற்கு  எழுதப்பட்ட ஆதாரம் உதவியது.

3 ) புனித ஜார்ஜ் கோட்டை பயன்பாட்டு  ஆதாரமாக கருதப்படுகிறது.

4 ) ஆசியாவின் மிகப்பெரிய ஆவணக் காப்பகம் உள்ள இடம் -டெல்லி 

5 ) தென்னிந்தியாவின் மிகப் பழமையான ஆவணக் காப்பகம் அமைந்துள்ள இடம்  சென்னை 


III ) கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து அட்டவணைப்படுத்துக.

7 . எழுதப்பட்ட ஆதாரங்கள் - துண்டுப் பத்திரிக்கை , இதிகாசம் , அரசு ஆவணம்.

பயன்பாட்டுப் பொருள் ஆதாரங்கள் - சித்தன்ன வாசல் ஓவியம் ,சிலை , செயிண்ட் ஜார்ஜ் கோட்டை , நாணயம்.


IV .8 . படத்தைப் பார்த்து விடையளி.


1 ) பாண்டிச்சேரியில் பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளராக இருந்த இவரின் பெயர் ஆனந்தரங்கம் பிள்ளை


2 ) இந்திய வரலாற்றில் இவருடைய பங்களிப்பை வரலாற்று நாட்குறிப்பு ஆவணம் குறிப்பிடுகிறது.


VI ) விடுபட்ட இடத்தைப் பூர்த்தி செய்க.

10 ) 1 - எழுதப்பட்ட ஆதாரங்கள் - ஆவணக்காப்பகம் - கடந்தகால மக்களின் அரசியல் , சமூக , பொருளாதார , கலாச்சார நடவடிக்கைகளை அறியலாம்.

2 ) பயன்பாட்டுப் பொருள் ஆதாரங்கள் (,ஆவணக் காப்பகங்கள் )   -  ஓவியங்கள் , சிலைகள்  - தேசியத் தலைவர்களின் சாதனையும் , இந்திய கட்டிடக் கலையின் கலை அம்சம் மற்றும் தொழில்நுட்பத்தை அறியலாம்.


VII ) வரிசை மாறியுள்ள நிகழ்வுகளை வரிசைப்படுத்துக. 

விடை

1 )  இங்கிலாந்து இராணி எலிசபெத் கிழக்கிந்திய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய லண்டன் வர்த்தக நிறுவனத்திற்கு அனுமதி பட்டயம் வழங்கினார்.

2 ) ஜஹாங்கீரிடம் மாலுமி வில்லியம் ஹாக்கின்ஸ் சூரத் நகரில் வணிக மையத்தை அமைக்க அனுமதி கோரினார். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை.


3 ) சூரத் அருகை நடைபெற்ற கடற்போரில்  ஆங்கிலேயர் தளபதி தாமஸ் பெஸ்ட் போர்த்துக்கீசிய கடற்படையைத் தோற்கடித்தார்.


4 ) ஜஹாங்கீரிடம் கி.பி.1613 ல் சூரத்தில் ஆங்கில வர்த்தக மையத்தை அமைக்க அனுமதித்தார்.


VIII ) படத்தை உற்று நோக்கி வினாக்களுக்கு விடையளி.

12 - செயிண்ட் ஜார்ஜ் கோட்டை 

i ) இக்கட்டிடத்தின் ஆரம்ப காலப்பெயர் - புனித ஜார்ஜ் கோட்டை 


ii ) இந்தக் கட்டிடம் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த ( பிரான்சிஸ்டே ) கட்டினார்.


iii ) சுதந்திர தின விழாவின்போது இக்கட்டிடத்தில் முதலமைச்சர் அணிவகுப்பு மரியாதையுடன் கொடியேற்றுவார்.


IX ) சரியான தெரிவைத் தேர்வு செய்க.

13 ) ( டாட்வெல் , ஆனந்தரங்கம் , ஆவணக்காப்பகம் , டெல்லி பாராளுமன்றம் , ரிசர்வ்வங்கி ) 

i ) 1935 ல் முறையாக நிறுவப்பட்டு இந்திய அரசின் ரூபாய் நோட்டுக்களை வெளியிடும் அதிகாரத்தைப் பெற்றது ( ரிசர்வ்வங்கி ) 

ii ) இந்தியக் கட்டிடக்கலையின் கலை அம்சம் மற்றும் தொழில் நுட்பச் சான்றாகவும் திகழ்கிறது ( டெல்லி பாராளுமன்றம் ) 

iii ) செனனனை நாட்குறிப்புப் பதிவு வெளியிட்டதிலும் , தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்ததிலும் இவருக்கு முக்கியப்பங்கு உண்டு ( டாட்வெல் )

iv ) இந்திய பிரெஞ்சு உறவுமுறை குறித்தும் , நவீன இந்தியா பற்றி அறிய எழுதப்பட்ட ஒரே சமயச்சார்பற்ற மதிப்புமிக்க நாட்குறிப்பு பதிவு ( ஆனந்தரங்கம் பிள்ளை ) 


X ) பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி.

i ) ஆங்கிலேயர்களால் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் ஆரம்பிப்கப்பட்ட வணிக மையம் ( மசூலிப்பட்டினம் )

ii ) இங்கிலாந்திற்கும் , போர்த்துகீசியருக்கும் ஏற்பட்ட திருமண உறவால் பெறப்பட்ட இடம் ( பம்பாய் தீவு )

iii ) தமிழ்நாட்டில் தலைநகராக இருக்கும் நகரில் அமைக்கப்பட்ட கோட்டை ( புனித ஜார்ஜ் கோட்டை

iv ) ஆங்கிலேய வணிகர் மெட்ராசை ( சந்திரகிரி ) பகுதியைச் சேர்ந்த மன்னரிடம் வாங்கினார்.


X ) அட்டவணையில் இந்தியாவிற்கு வருகை புரிந்த ஐரோப்பியர்களை வட்டத்தில் குறிப்பிடுக.

விடை 

i ) ஆங்கிலேயர்கள் 

ii ) டச்சுக்காரர்கள்

iii ) டேனியர்கள்

vi ) பிரெஞ்சுக்காரர்கள்.

வாழ்த்துகள் மாணவச் செல்வங்களே ! வீட்டிலிருந்தே நம் பாடங்களை மகிழ்வுடன் கற்போம்.


மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை  - 97861 41410

Post a Comment

0 Comments