முகம் மலர புன்னகையுடன்,
இரயில் நிலையம் மூன்று
கிலோ மீட்டர் தூரம்தான் என்றும் ,
பொறியியல் கல்லூரி இரண்டு
கிலோ மீட்டர் தூரம்தான் என்றும் ,
தேசிய நெடுஞ்சாலை ஒரு கிலோ
மீட்டர் தூரம்தான் என்றும்
சின்னத்திரை விளம்பரத்தில்
சின்னத்திரை நடிகரும் , நடிகையும்
சிரித்துக்கொண்டே
விளை நிலத்தை விலை பேசிக்
கொண்டிருந்தனர்
வாங்கிய தொகைக்காக
ஏதோ ஒரு ரியல எஸ்டேட் ் பணக்காரனுக்கு !
மு.மகேந்திர பாபு.
0 Comments