மழ !
என்னத்தச் சொல்ல ? அங்க பெய்யுது ... இங்க பெய்துன்னு டிவிப் பொட்டியில சொல்றானுக. இங்க ஒரு தூத்தலக் கூடக் காணோம் ... ரோட்ல மொழங்கால் அளவு தண்ணி ஆறுமாதிரி ஓடுது. இங்க என்னடான்னு காட்ல கால் வச்சா , தார் ரோட்ல கால வைக்கிற மாதிரி பொசுக்குது ...
ஒரு மருந்துக்கூட மழயக் காணமடா ! ஆமா ... மதுரல மழையடா ?
ஆமாப்பா ! இங்கன அப்பப்ப மழ லேசா வந்து போகுது. ஆடு மாடுகளுக்கு ஆகும்.
மனுசனக்கு இல்லன்னாலும் மாடுகன்னுகளுக்காவது புல்பூண்டு மொளைக்குதேனு ஆசுவாசப் பட்டுக்கிற வேண்டியதுதான்.
இப்ப எங்கபா இருக்கிங்க ?
நம்ம மொதலிபட்டி பிஞ்சயிலதான். ஒரு லேசான மழ வந்தாக்கூட சோளப்பயிறு எந்திரிச்சு வந்துரும்.சரி பாப்போம். மக என்னடா பண்ணுறா ?
அம்முக்குட்டி இந்தா தாத்தாகிட்ட பேசு ...
அப்பாடா , யாரு ? முருகா தாத்தாவா ?
ஆமா !
கலோ ... தாத்தா ... எப்படி இருக்கிங்க ? ஆமா ஆமா ! சரி.ம் ம் .
மகளின் மழலைப் பேச்சில் மழைக் கவலையைச் சற்றுநேரம் மறந்திருந்தார் அப்பா.
மு.மகேந்திர பாபு.
06 - 11 - 17 .
0 Comments