விதை நெல் அரிசி
------------------------
மழை பெய்து கம்மாயிற்கு தண்ணி வந்தவுடன் எங்க ஊர்க்காருக வெத நெல் வாங்கி , ஒரு சணல் சாக்கில் கட்டி , முழங்கால் அளவு கம்மாத் தண்ணிக்குள் முக்கி , மேலே ஒரு முண்டுக் கல்லைத் தூக்கி வைத்துவிட்டு , வீட்டுக்குப் போயிருவாக.
மூடை வச்ச எடத்தில் வச்ச மாதிரியே இருக்கும்.களவுக்கு எடமில்லை. வயலும் , நெல்லும் கோயிலும் சாமியும் மாதிரி.யாரும் யார் பொருளையும் தொடமாட்டாக.
பச்சப் பிள்ளக்கி வாயிக்குள்ள ஈற முட்டி வரும் பல்லுப் போல , தண்ணிக்குள்ள இருக்குற சாக்குல உள்ள வெத நெல்லு , மூனாம் நாளு சாக்கை முட்டி மொளக்கூரி வரும்.மூனு நா தண்ணில ஊருணாலே போதுமானது.
சாக்கத் தலச்சுமயா வயலுக்கு கொண்டாந்து, பெட்டியில கொட்டி தயாரா இருக்குற நாத்தாங்கால்ல வெதக்கனும். முக்குருணியோ , ஒரு ஏக்கரோ அளவுக்கு தகுந்த மாரி நெல்ல வெதப்பாக.
எல்லா வெத நெல்லயும் வெதக்காம கொஞ்சத்த வீட்டுக்குக் கொண்டுட்டுப் போறது வழக்கம். அந்த வெத நெல்ல ஒரல்ல போட்டு நல்லா உமி போக குத்தி , சொளகால பொடச்சாப் பிறகு வடச்சட்டி போட்டு நல்லாஆ வறுப்பாக.வறுக்கும் போதே வாசன சும்மா மூக்கத் தூக்கும்.
ஆளுக்குக் கொஞ்சமா பங்கு பிரிச்சி அதத் திங்கும் போது , அடடா , என்ன ருசி என்ன ருசி ...
அப்படி ஒரு ருசி எந்த மிட்டாயக் கடையிலயும் இல்லங்க.
சேக்காளிக்கு டவுசர் பையில போட்டுக் கொண்டு போயிக் கொடுத்த சந்தோசம் , நூத்துக் கணக்கான ரூவாய்க்கு பாலிதின் பையில இப்ப திண்பண்டம் வாங்கிக் கொடுக்கறதில இல்லீங்க.
மு.மகேந்திர பாபு.
12 Comments
வெத நெல்லு வாசம்........மனசுக்குள் நேசம்........
ReplyDeleteமிக்க நன்றி.
Deleteமிக மிக அருமை ஐயா....
ReplyDeleteமுத்துக்கடலில் முத்துத்தமிழாய் வாழ்த்து வழங்கியமைக்கு மிக்க நன்றி ஐயா.
Deleteஅருமையான வரிகள் ஐயா...
ReplyDeleteஇனிய தமிழில் வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ஐயா
Deleteநல்ல முயற்சி.பல்க முயற்சி
ReplyDeleteமிக்க நன்றி ஐயா
Deleteஅருமை அருமை. இந்தத் தலைமுறைக்கு தெரியாத சொல் விதைநெல்... அதனைப் பதிவு செய்துள்ளது மிகவும் சிறப்பு ஐயா. வாழ்த்துகள்
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.தங்கள் கருத்தில் மகிழ்ந்தேன்.
Deleteஅருமையான பதிவு ஐயா!!...
ReplyDeleteமிக்க நன்றி ஐயா
Delete