சமத்துவம் - வாசகம்

 


சமத்துவம் -  வாசகம் - முழக்கத் தொடர்கள்.


1) சாதி மதங்களை மறப்போம்!

சகோதர சகோதரிகளாய்ச் சிறப்போம்!


2) சமத்துவம் ஒன்றே நோக்கம்!

சாதனை செய்வதே ஆக்கம்!


3) அன்பால் அனைவரையும் நனைப்போம்!

அறிவால் அகிலத்தை இணைப்போம்!


4) பிறப்பில் இல்லை உயர்வு தாழ்வு!

பெருமை என்பதே சமத்துவ வாழ்வு!


5) செய்யும் செயலே உயர்வாகும்!

சேவை எண்ணமே உயிராகும்!


6) உயர்வு தாழ்வு சொல்லாதே!

சாதிப் பெருமை நில்லாதே!


7) சமத்துவ விதைகளை விதைப்போம்!

சாதி விசங்களைப் புதைப்போம்!


8) ஏற்றத் தாழ்வை நீக்கிவிடு!

எல்லாரும் ஒன்றென ஆக்கிவிடு!


9) பள்ளி செல்லும் பிள்ளையே!

பாகுபாடு நம்மில் இல்லையே!


10) சமத்துவம் எங்கும் நிறையட்டும்!

சாதியப் பாகுபாடு மறையட்டும்!


மு.மகேந்திர பாபு.



வகுப்பறை வாசகங்கள்



சமத்துவம் -  வாசகம்


1) சாதி மதங்களை மறப்போம்!

சகோதர சகோதரிகளாய்ச் சிறப்போம்!


2) சமத்துவம் ஒன்றே நோக்கம்!

சாதனை செய்வதே ஆக்கம்!


3) அன்பால் அனைவரையும் நனைப்போம்!

அறிவால் அகிலத்தை இணைப்போம்!


4) பிறப்பில் இல்லை உயர்வு தாழ்வு!

பெருமை என்பதே சமத்துவ வாழ்வு!


5) செய்யும் செயலே உயர்வாகும்!

சேவை எண்ணமே உயிராகும்!


6) உயர்வு தாழ்வு சொல்லாதே!

சாதிப் பெருமை நில்லாதே!


7) சமத்துவ விதைகளை விதைப்போம்!

சாதி விசங்களைப் புதைப்போம்!


8) ஏற்றத் தாழ்வை நீக்கிவிடு!

எல்லாரும் ஒன்றென ஆக்கிவிடு!


9) பள்ளி செல்லும் பிள்ளையே!

பாகுபாடு நம்மில் இல்லையே!


10) சமத்துவம் எங்கும் நிறையட்டும்!

சாதியப் பாகுபாடு மறையட்டும்!


மு.மகேந்திர பாபு.


2) சிக்கனமும் சேமிப்பும்



உலகச்சிக்கன நாள் சொற்றொடர்கள்


1) சிறிய வயதில் சேமிப்பு

பெரிய வயதில் பூரிப்பு


2) தினமும் சேமித்தால் வரவு

தேடி வந்திடும் உறவு


3) வங்கியில் தொடங்கு கணக்கு

வாழ்க்கையில் இல்லை பிணக்கு


4) சிறுகச் சிறுகச் சேமிப்போம்

சிறப்பாய் வாழ்ந்து காமிப்போம்


5) உண்டியலில் சேமிக்கின்ற காசு

உயர்த்தும் என்றே பேசு


6) நீரைச் சேமிக்கத் தொட்டி

பணத்தைச் சேமித்தால் வட்டி


7) நல்வழியில் சேமிக்கப் பழகு

நாளும் உனைப் போற்றும் உலகு.


8) செலவினைத் தந்திடும் விழாக்காலம்

சேமிப்பு இருந்தால் மகிழ்ச்சிக் காலம்


9) சேமிப்பில் நானும் ஓர் எறும்பு

தினமும் சேமிக்க நீயும் விரும்பு



3) சுற்றுச்சூழல் வாசகங்கள் -



1 ) இயற்கையை நேசிப்போம் !

  இயன்றதை யாசிப்போம் !


2 )  மரங்கள் இருக்குமிடம்

  மகிழ்ச்சி நிலைக்குமிடம்


3 ) மரம் மனிதனின் மூன்றாவது

  கரம்


4 ) மண் வளமே மனித வளம்


5 ) மரங்களால் சுற்றுச் சூழல் வளமாகும்.

மனித வாழ்வு நலமாகும்


6 ) துணிப்பையைத் தூக்கு

  நெகிழிப் பையை நீக்கு


7 ) மண்ணின் வளம் காக்கனும்

இயற்கை உரம் சேர்க்கனும்


8 ) ஆளுக்கொரு மரம் நடுவோம்

மண்ணில் வாழ ! மண்ணை ஆள !


9 ) மரம் வளர்க்க மழை பொழியும் !

மழை பொழிய வறுமை ஒழியும் !


மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் ,

அரசு மேல் நிலைப் பள்ளி ( ஆ.தி.ந )

இளமனூர் , மதுரை.

பேசி - 97861 41410.         




Post a Comment

0 Comments